லாக்டவுன் இப்படி மாத்திடுச்சே.. குவாரைன்டைன் பார்ட்னர் இவர்தானாம்.. பிரபல நடிகை வெளியிட்ட போட்டோ!
சென்னை: தனது குவாரன்டைன் பார்ட்னர் யார் என்பதை பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில், சிம்புவின் 'காதல் அழிவதில்லை' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சார்மி. தொடர்ந்து ஆஹா அப்படித்தான், பிரபுசாலமன் இயக்கிய லாடம் உட்பட சில படங்களில் நடித்தார்.
பின்னர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், அங்கு முன்னணி நடிகையானார்.

தயாரிப்பாளர் ஆனார்
திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை சார்மி, இசை அமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் உட்பட பல தெலுங்கு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். இப்போது, பிரபல தெலுங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். இவர் தயாரித்த, ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானது.

விஜய் தேவரகொண்டா
இதையடுத்து, இப்போது விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிக்கும் படத்தை இந்தி, தெலுங்கு, தமிழில் தயாரித்து வருகிறார். இதை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி கிண்டலாக வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். பிறகு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அதற்கு மன்னிப்புக் கேட்டார்.

கொரோனா வைரஸ்
இப்போது கொரோனா காரணமாக வீடுகளுக்குள் இருக்கும் நடிகர், நடிகைகள், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்டு வருகின்றனர். அதில் நடிகை சார்மியும் ஒருவர். அவர் இப்போது, இவர்தான் என் குவாரன்டைன் பார்ட்னர் என்று ஒரு போட்டோவை பதிவிட்டுள் ளார். அதில் ஒரு நாயுடன் அவர் படுத்திருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் இதற்கு ஏராளமான கமென்ட்களை பதிவிட்டுள்ளனர்.

நல்ல பார்ட்னர்
'இது உங்களோட புது செல்லமா? என்று சில நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். சிலர், இப்படி செல்ல நாயோடு தூங்கக் கூடாது என்றும் நல்ல பார்ட்னர் பாத்தும்மா என்றும் கூறியுள்ளனர். 'நாய் உங்களை விட பெருசா இருக்கும் போல' என்று சிலர் கேட்டுள்ளனர். ஒருவர், இதுல யார் கியூட்ன்னு குழப்பமா இருக்கே? என்று கலாய்த்துள்ளனர். இன்னொருவர், ஆமா, இது நிஜ நாயா, இல்லை பொம்மையா? என்று கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











