அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்.. பாலா போன் செய்து சொன்ன விஷயம்.. சாயா தேவி ஓபன்!

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய கணவர் தன்னை நடிக்க ஊக்குவிப்பதாக அவர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

இந்நிலையில் வரலட்சுமியின் அம்மாவும் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவிமான சாயா தேவி தற்போது வணங்கான் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அவரது கேரக்டர் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிப்பதற்கு தன்னுடைய மகள் வரலட்சுமி தான் தனக்கு டிப்ஸ் கொடுத்ததாக சாயாதேவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

chaya devi vanangaan movie varalaxmi sarathkumar

நடிகை வரலட்சுமி சரத்குமார்: நடிகை வரலட்சுமி சரத்குமார் அடுத்தடுத்து தமிழ். தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது அம்மா சாயா தேவி தற்போது வணங்கான் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். முன்னதாக போடா போடி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் இவர் நடித்திருந்தார். வெளிநாட்டில் இந்த படத்தின் சூட்டிங் நடந்த நிலையில் திடீரென மருத்துவர் வேடத்தில் நடிக்க வேண்டிய நபர் வராததால் அந்த கேரக்டரில் சாயாதேவி நடித்துக் கொடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

வணங்கான் படத்தில் சாயா தேவி: இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சாயாதேவி நடித்துள்ளார். இந்த படத்தில் தன்னை பாலா வற்புறுத்தி நடிக்க வைத்ததாக சாயாதேவி தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு வரலட்சுமி அதிகமான டிப்ஸ்களை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய நடிப்பு குறித்து இயக்குனர் பாலா வரலட்சுமியிடம் கால் செய்து பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். முன்னதாக மிஸ் பெங்களூரு பட்டத்தை வென்ற சாயா தேவி, நடிகர் சரத்குமாரை கடந்த 1984ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

வரலட்சுமி திருமணம்: இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2000ம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தாலும் தன்னுடைய அப்பாவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார் வரலட்சுமி சரத்குமார். கடந்த ஆண்டில் இவரது திருமணம் நடந்த நிலையில், சரத்குமார், ராதிகா என அனைவரும் இவரது திருமணத்தில் கலந்துக் கொண்டனர். சங்கீத் நிகழ்ச்சியில் சரத்குமார் -ராதிகா இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மகளை தொடர்ந்து அம்மா: முன்னதாக பாலாவின் இயக்கத்தில் நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பாலா இயக்கத்தில் சாயா தேவி நடித்துள்ளார். தான் அவரது இயக்கத்தில் நடிக்க தன்னுடைய மகள் வரலட்சுமி மிக அதிகமான ஊக்கத்தை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். சேவ் சக்தி என்ற அறக்கட்டளையை நிர்வகித்துவரும் சாயா தேவி, சரத்குமாருடனான விவாகரத்தையடுத்து பல பிரச்சினைகளை தான் சந்தித்ததாகவும் திருமணம் என்பது ஒருநாள் கூத்து கிடையாது என்றும் முன்னதாக கூறியிருந்தது சமூக வலைதளங்களில் அதிகமான கவனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X