For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இரவு 8 மணிக்கு இப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்த சித்ராவா இந்த முடிவை எடுத்தார்?கதறும் ரசிகர்கள்!

  |

  சென்னை: நடிகை சித்ரா கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த போட்டோ வைரலாகி வருகிறது.

  பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ராவின் மரணம் தமிழ் சினிமாவையும் சின்னத்திரை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  இதை செய்ய எப்படி டி துணிஞ்ச.. விஜே சித்துவின் மரணத்தால் உடைந்து போன பிக் பாஸ் பிரபலம்!

  தூக்கில் தொங்கிய சித்ராவின் முகத்திலும் உடம்பிலும் காயங்கள் உள்ளது அவரது மரணத்தில் ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளன.

  கணவருடன்

  கணவருடன்

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மும்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஈவிபி பிலிம் சிட்டியில் சீரியலுக்கான ஷுட்டிங்கை முடித்துவிட்டு தனது கணவர் ஹேம்நாத்துடன் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார்.

  தூக்கில் தொங்கி..

  தூக்கில் தொங்கி..

  அதிகாலை 2 மணியளவில் குளிக்க வேண்டும் என கணவரை வெளியே அனுப்பிய சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற ஹேம்நாத் நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காமல் இருந்ததால் ஹோட்டல் நிர்வாகத்தின் உதவியுடன கதவை திறந்து பார்த்தப்போது சித்ரா ஃபேனில் தூக்கில் தொங்கியுள்ளார்.

  கணவன் மனைவிக்குள் சண்டையா?

  கணவன் மனைவிக்குள் சண்டையா?

  அவரது கன்னம் மற்றும் முகத்தில் காயங்கள் உள்ளன- இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருக்கலாம் என்றும் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் சித்ரா இப்படி ஒரு முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கிடுக்கிப்பிடி விசாரணை

  கிடுக்கிப்பிடி விசாரணை

  சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குவிந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நட்சத்திரங்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ராவை பதிவு திருமணம் செய்த ஹேம்நாத்திடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பல போட்டோ ஷுட்

  பல போட்டோ ஷுட்

  சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சித்ரா, அடிக்கடி தனது க்யூட் போட்டோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். சேலை, மாடர்ன் உடை என வித விதமாக பல போட்டோ ஷுட்டுக்களை நடத்தியுள்ளார் சித்ரா.

  கடைசி போட்டோ..

  கடைசி போட்டோ..

  அந்த வகையில் பச்சை மற்றும் ஊதா நிற சில்கி ஷேட் பாவாடை தாவணியில் ஹோம்லி லுக்கில் அண்மையில் நடத்திய போட்டோ ஷுட்டின் போட்டோக்களை சித்ரா நேற்றிரவு 8 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஜிமிக்கி கம்மல், நெத்திசுட்டி, ஒட்டியானம், அசத்தல் ஹேர் ஸ்டைல் என கலக்கலாக உள்ளார் சித்ரா.

  ஜீரணிக்க முடியவில்லை..

  ஜீரணிக்க முடியவில்லை..

  சித்ரா கடைசியாக ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், ஏன் இப்படி அவசரப்பட்டுவிட்டீர்கள் என கலங்கி வருகின்றனர். அவரது இந்த போட்டோவை பார்த்த நடிகை யாஷிகா ஆனந்த் மிஸ் யூ டா, ஜீரணிக்கவே முடியவில்லை. சீக்கிரம் போய்விட்டாய் என்று பதிவிட்டுள்ளனர்.

  உயிரோடு இல்லை

  உயிரோடு இல்லை

  அவர் இந்த போட்டோவை ஷேர் செய்த உடனேயே அவரது அழகை அதிசயமே அசந்துபோகும் அதிசயம் அழகி சித்து அக்கா என வர்ணித்துள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது சித்ரா உயிரோடு இல்லை என்பதால் பலரும் RIP என பதிவிட்டு வருகின்றனர்.

  குவியும் லைக்ஸ்

  குவியும் லைக்ஸ்

  சித்ராவின் இந்த கடைசி பதிவு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்டுகளையும் பெற்றுள்ளது. இந்த போட்டோவை பார்த்த பலரும் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  English summary
  Actress Chithra's last insta post goes viral on social media. Yashika Anand condoles for her demise.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X