"கன்"ன்னைக் காட்டிய பங்கஜ்.. வீலென்று அலறிய ரிது சிங்.. ஷூட்டிங்கில் ஒரு திரில் சம்பவம்!

நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டி, திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்திய வாலிபரை, உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர்.

லக்னோ: பிரபல நடிகை ரிது சிங்கை, வாலிபர் ஒருவர் துப்பாக்கி முனையில் திருமணத்துக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போஜ்புரியில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரிது சிங். 'துவாரி பிடியா' எனும் படத்தில் இவர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக ரிது சிங் சென்றார். சோன்பத்ராவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் படக்குழுவினர் தங்கினர். அதே ஓட்டலில் தான் ரிது சிங்கும் தங்கியிருந்தார்.

துப்பாக்கி முனையில் மிரட்டல்

துப்பாக்கி முனையில் மிரட்டல்

இந்நிலையில் நேற்று, ரிது சிங்கின் அறைக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரிது, அவர் யார் என விசாரித்தார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த வாலிபர், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ரிதுவை மிரட்டினார்.

ரிது கூச்சல்

ரிது கூச்சல்

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த ரிது, தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அதைக்கேட்டு அசோக் எனும் வாலிபர் ரிது அறைக்கு சென்றார். அப்போது அந்த வாலிபர், அசோக்கின் கையில் துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அசோக், அங்கேயே மயங்கி விழுந்தார்.

போலீசுக்கு தகவல்

போலீசுக்கு தகவல்

துப்பாக்கி சத்தத்தை கேட்டு ஓட்டல் ஊழியர்கள், ரிது அறைக்கு விரைந்து வந்தனர். போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் அந்த வாலிபர் துப்பாக்கியை காட்டி வைத்து எல்லோரையும் மிரட்டியபடி இருந்தார். போலீசார் வந்ததும் அவர்களை நோக்கியும் சுட்டார். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வாலிபர் கைது

வாலிபர் கைது

சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட நடிகை ரிதுவை மீட்டனர். போலீஸ் விசாரணையில், துப்பாக்கியை வைத்து மிரட்டிய அந்த வாலிபர், ஜான்பூரைச் சேர்ந்த பங்கஜ் என்பது தெரியவந்தது.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

இந்த சம்பவத்தால் நடிகை ரிது சிங் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதையடுத்து, படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, படக்குழு சொந்த ஊர் திரும்பியது. இந்த சம்பவம் போஜ்புரி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X