அசிங்கமா திட்டினாலும் எடுத்துக்கக்கூடாது... சிம்பு வீடியோ... பகிர்ந்த இளம் நடிகை!
சென்னை : நடிகர் சிம்பு மாநாடு வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
Recommended Video
தற்போது கௌதம் மேனனின் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகை ஒருவர் சிம்புவின் சினிமா குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு நீண்ட காலங்களாக நடித்து வருகிறார். இவரை விரல் நடிகர் என்று ரசிகர்கள் அழைப்பார்கள். அந்த வகையில் விரல்களாலேயே வித்தை காட்டுவார். இவர் குழந்தையாக இருந்தபோதே தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து சிறுவனாகவும், இளைஞனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சர்ச்சைக்குரிய நடிகர்
பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் சர்ச்சைகளிலும் அதிகமாக சிக்கிய நடிகர் என்றால் தாராளமாக சிம்புவை கைக்காட்டலாம். சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வரமாட்டார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி தற்போது தேர்ந்தெடுத்த நடிப்பை வழங்கி வருகிறார்.

மாநாடு படம்
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இவர் நடித்திருந்த மாநாடு படம் இவருக்கு சிறப்பான வகையில் கைக்கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக நடித்திருந்த ஈஸ்வரன் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது சரியான நேரத்தில் சூட்டிங்கிற்கு வருவது உள்ளிட்ட பக்குவமான செயல்பாடுகளை இவர் காட்டி வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படம்
தற்போது கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இவரது கெட்டப்புகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. படத்தின் போஸ்டர்கள் மூலம் இதை உணர முடிகிறது. இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக இம்மாத துவக்கத்தில் பத்து தல படத்தில் இணையவுள்ளார்.

சிம்புவின் வீடியோ
அடுத்ததாக கொரோனா குமார் உள்ளிட்ட படங்களிலும் இவர் கமிட்டாகியுள்ளார். தன்னுடைய 50வது படத்தில் இயக்குநர் ராம் டைரக்ஷனில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தன்னுடைய சினிமா கேரியர் குறித்து பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றை இளம் நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அசிங்கமாக பேசினாலும் எடுக்கக்கூடாது
யாரும் செருப்பால் அடித்தாலும் அசிங்கமாக பேசினாலும் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் நாம் நம்முடைய நடிப்பை பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் அவ்வாறு பேசுவதற்கு காரணம் நம்முடைய வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்று சிம்பு அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதையொட்டியே அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் முதிர்ச்சி காணப்படுகிறது போலும்.


Click it and Unblock the Notifications











