மரியாதையா பேச சொல்லுங்க சார்.. வெற்றிமாறனுக்கு நடிகை வைத்த கோரிக்கை.. புது பிரச்னை

சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையே கவின் ஹீரோவாக நடிக்கும் மாஸ்க் என்ற படத்தை வெற்றிமாறன் தயாரித்தும்வருகிறார்.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.

Vetrimaaran Deepa Baskar Kavin

விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கினார் வெற்றி. படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் படம் திரையிடப்பட்டு செம ரெஸ்பான்ஸை அள்ளி வருகிறது. நிச்சயம் விடுதலை படத்தைவிடவும் விடுதலை 2 வீரியமிக்கதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பர்த்திருக்கின்றனர்.

வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. அதேபோல் அவர் எப்போது வடசென்னை 2 படத்தை இயக்குவார் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.

குற்றச்சாட்டு: இதற்கிடையே கவின் ஹீரோவாக நடிக்கும் மாஸ்க் படத்தையும் தயாரிக்கிறார் வெற்றிமாறன். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவரும் நிலையில் நடிகை தீபா பாஸ்கர் தனது சமூக வலைதள பக்கத்தில், 'விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இப்போது இருக்கும் வெற்றிமாறன் இப்போது கவின் நடிப்பில் மாஸ்க் படத்தை தயாரித்துவருகிறார்.

சொல்லிக்கொடுங்க: இதில் தமிழ் திரைப்பட கலைஞருக்கு அடிமட்ட அளவில்தான் சம்பளம் பேசுகிறார்கள். குறைந்தபட்சம் உங்கள் மேனேஜரிடம் மரியாதையா பேச சொல்லிக்கொடுங்கள். வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் சுய மரியாதைதான் முக்கியம் என்று சொல்லி நான் விலகிவிட்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X