திரைக்கு பின் நடக்கும் கொடுமை.. குழந்தையை சித்திரவதை செய்றாங்க..நடிகை தீபா வேதனை!
சென்னை: மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தீபா. தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ் என பல முன்னணி சேனல் சீரியல்களில் நடித்து வருகிறார். சீரியல்கள் மட்டுமல்லாமல் சினிமாவிலும் கலக்கி வரும் தீபா, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய ஆளாக வரவேண்டும் என்று சித்திரவதை செய்வதாக கூறியுள்ளார்.
மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, மண்டேலா, கடைசி விவசாயி, வீட்ல விஷேசம், தண்டட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் தீபாவின் நகைச்சுவையான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது.

நடிகை தீபா: எப்போதும் கலகலப்பாக, ஜாலியான ஒரு நபராக இருந்து வரும் தீபாவை விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவரை அனைவரும், தீபா அக்கா என்றே அழைத்ததால், பொது இடத்திலும் இவரை அனைவரும் தீபா அக்கா என்று அழைத்து வருகின்றனர்.
குழந்தைகள் மீது திணிக்கிறார்கள்: திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை தீபா, உலகமே போட்டிப் போட்டுக் கொண்டு போகிறது. என் பிள்ளை பெருசா, உன் பிள்ளை பெருசான்னு என நம்முடைய பொறாமை குணத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு அதை குழந்தைகள் மீது திணித்து அவர்களின் குழந்தைத்தனத்தை பெற்றோர்கள் மறக்கடிக்கிறார்கள்.
சித்திரவதை: இன்னொரு சம்பவம் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நடக்கும், குழந்தைகள் டான்ஸ், பாடுவது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இந்த குழந்தைகளை தாய்மார்கள் சித்திரவதை செய்கிறார்கள். குழந்தைகளின் மனநலம் பாதிக்கும் அளவிற்கு சித்ரவதை செய்கிறார்கள். என் குழந்தை இந்த உலகத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
குரங்கு பொம்மை அல்ல: இயற்கையிலேயே குழந்தைகளுக்கு பாடக்கூடிய திறமை இருந்தால் அதை யாரும் மறைக்க தேவையில்லை அது தானாகவே வெளியே வந்துவிடும். குழந்தைகள் பெற்றோர் கையில் இருக்கும் குரங்கு பொம்மை அல்ல, நீங்கள் சொல்வது போல எல்லாம் ஆடுவதற்கு என்று குழந்தைகள் பற்றி அழகாக பேசினார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
உருக்கமான பேச்சு: அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், தென் மாவட்டங்களில் சிறு வயதில் இருந்தே பெண்களுக்கு புருஷன் தாசி வீட்டுக்கு போனாலும் அவனை கூடையில் வைத்து சுமக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார்கள். அப்படி புருஷன் இன்னொருத்தி வீட்டுக்கு போனா நீ கேள்வி கேட்கக்கூடாது... அவனுக்கு தொண்டுகள் செய்யணும், இல்லன்னா இந்த சமுதாயம் உன்னை தவறாக சொல்லிவிடும், நீ பத்தினி கிடையாது என்று சொல்லியே எங்களை வளர்க்கிறார்கள் என்று கண்ணீர் விட்டு பேசியது இணையத்தில் வைரலானது.


Click it and Unblock the Notifications











