Actress Deepa: டாக்டர் படத்தால் மிஸ்ஸான ரஜினி படம்.. விஜய் டிவி பிரபலம் தீபா வருத்தம்!

சென்னை: விஜய் டிவியின் பிரபலமாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நடிகை தீபா. குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடிந்தது.

தமிழில் மாயாண்டி குடும்பத்தார் படம் மூலம் அறிமுகமானார் தீபா. இந்தப் படம் கடந்த 2009ம் ஆண்டில் வெளியானது.

Actress Deepa opens about the Annaathe movie she missed because of Doctor movie

தொடர்ந்து தமிழில் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் என அடுத்தடுத்தப் படங்களில் நடித்துள்ள தீபா, தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.

நடிகை தீபா: நடிகை தீபா தமிழில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், மண்டேலா, கடைசி விவசாயி, வீட்ல விஷேசம் என தீபா நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகியுள்ளன. தொடர்ந்து கேரக்டர் மற்றும் நகைச்சுவை ரோல்களில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்: கடைக்குட்டி சிங்கம், டாக்டர் போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கேரக்டர்களில் நடித்திருந்தார் தீபா. குறிப்பாக டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை கவனம் பெற்றது. தற்போது வா வரலாம் வா என்ற படத்தில் சிங்கம்புலியுடன் இணைந்து நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ளார் தீபா. இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் சிறப்பாக பங்கேற்றுவரும் தீபா, தன்னுடைய கேரியரில் தான் எதிர்கொண்ட பல சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

பாகுபாடு பார்க்காத தீபா: தான் நடிக்கும் படங்களின் கதைகளை கேட்பதில்லை என்றும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடவுள் புண்ணியத்தில் தனக்கு சிறப்பான கேரக்டர்கள் அமைந்து வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சில கேரக்டர்களில் நடிப்பதை தான் தவிர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மிஸ்ஸான ரஜினி பட வாய்ப்பு: முன்னதாக டாக்டர் படத்தில் நடித்தபோது தனக்கு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் இரு படங்களின் தேதிகள் ஒரே நேரத்தில் வந்ததால் தன்னால் ரஜினி படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் தீபா வருத்தம் தெரிவித்துள்ளார். தான் சிறு வயதிலிருந்தே ரஜினியின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவருடன் இணைந்து நடிக்காதது தற்போதுவரை வருத்தம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் முதலில் ஒப்புக்கொண்ட டாக்டர் படம் தனக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

நேசித்து வேலை செய்ய தீபா அறிவுரை: சினிமாவாக இருந்தாலும் சீரியலாக இருந்தாலும் நேசித்து வேலை செய்தால் சிறப்பான வரவேற்பை பெற முடியும் என்றும் இளம் நடிகர்களுக்கு தீபா அறிவுறுத்தியுள்ளார். தொழில்நுட்பங்கள் வளர்ந்தபோதிலும் தற்போதும் டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டே நடிப்பதாகவும் தொழிலில் பக்தியாக இருந்தால் வெற்றி சாத்தியம் எனவும் அவர் கூறியுள்ளார். நடிக்கும்போது மற்ற விஷயங்களில் தலையிடாமல் ஃபோகஸ்டாக தன்னுடைய வேலைகளில் தான் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X