பூமித்தாயம்மா.. இனிமே இப்படி நடக்காது.. குழந்தைய பத்திரமா எங்கக்கிட்ட கொடுத்துடுங்க.. நடிகை உருக்கம்

Recommended Video

அதிசயம் நிகழும் சரத்குமார் உருக்கமான பதிவு

சென்னை: இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது எங்கள் குழந்தையை பத்திரமா எங்கக்கிட்ட கொடுத்துடுங்க என நடிகை தீபா சங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகை தீபா சங்கர் மெட்டி ஒலி சீரியலின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்ட ஸ்லாங்கிலேயே பேசி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார் நடிகை தீபா சங்கர். ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எப்போது பள்ளம் தோண்டும் பணி நிறைவடையும் குழந்தை மீட்கப்படுவான் என காத்திருக்கிறது தமிழகம்.

வழிபாடு

வழிபாடு

அல்லும்பகலும் அரசு அதிகாரிகள் தூக்கமின்றி குழந்தையை வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உணவு, தண்ணீர் இன்றி நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் இருக்கும் குழந்தையை நல்லபடியாக மீட்க வேண்டும் மத பேதமின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

நடிகை தீபா சங்கர்

நடிகை தீபா சங்கர்

குழந்தை சுஜித் நல்லபடியாக மீண்டு வரவேண்டும் என திரை பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை தீபா சங்கர் குழந்தை சுஜித் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பத்திரமா கொடுத்துடுங்க

பத்திரமா கொடுத்துடுங்க

பூமித்தாயம்மா இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. எங்கள் குழந்தையை பத்திரமாக எங்களிடம் கொடுத்துவிடுங்கள். குழந்தை பெற்றவருக்குதான் அதன் வலி தெரியும்.

பெத்தவங்களுக்கு...

பெத்தவங்களுக்கு...

எல்லா தாய்மார்களும் சுஜித்துக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். குழந்தைகளை பெற்றோர் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். சுஜித் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

 பாராட்டத்தக்கது

பாராட்டத்தக்கது

இதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் , சுஜித்தை இவ்வளவு நேரமாகியும் மீட்க முடியாமல் இருப்பது துயரமானது. மழை, பாறை, எந்திரக் கோளாறு என தடைகளை தாண்டி நடைபெறும் பணி பாரட்டத்தக்கது என்று கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X