நீ என்ன ஐஸ்வர்யா ராயானு கேலி பேசுவாங்க… மனம் திறந்த தீபாக்கா!
சென்னை : பல ஆண்டுகாலமாக நாம் அனைவருக்கும் பரீச்சியமானவர்தான் தீபா சங்கர். காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார்.
திறமை இருந்தால் போது யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம், நிறம் முக்கியமில்லை என்பதை நிரூபித்துள்ளார் தீபா சங்கர்.

இயல்பான நடிப்பு
வெள்ளந்தியான சிரிப்பு, மிதமிஞ்சாத நடிப்பு, அனைவரிடத்திலும் அன்போடு பேசுவது இவை அனைத்தும் தீபா சங்கருக்கு பிளசாக அமைந்துவிட்டன. இப்போது இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.

கிடைத்த வேடத்தில்
சன் டிவியில் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் முதன்முறையாக நடித்தார் தீபா. இதையடுத்து, கோலங்கள் என அடுத்தடுத்த சீரியல்களில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் கிடைத்த கதாபாத்திரத்தையும் விட்டுவிடாமல் நடித்துள்ளார் தீபா.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் தனது தடத்தை பதித்தார் தீபா சங்கர். 2009ம் ஆண்டு வெளியான வெடிகுண்டு முருகேசன் என்ற படத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து, மாயாண்டி குடும்பத்தார், கடைகுட்டி சிங்கம், மகாமுனி சமீபத்தில் வெளியான பரமபதம்விளையாட்டு போன்ற திரைபடங்களில் நடித்துள்ளார்.
Recommended Video

சிவகார்த்திகேயனுடன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்கோமாளி நிலையில் கலந்து கொண்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். கலகலனு சிரித்துக்கொண்டு, இயல்பாக பேசி அந்த இடத்தை மேலும் கலகலப்பாக்கினார் தீபா. தற்போது இவர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கேலி செய்தனர்
தீபா சமீபத்தில் அளித்துள்ள பேட்டிகளில் என் நிறத்தை வைத்து பலர் என்னை கிண்டல் செய்தனர். நீ என்ன ஐஸ்வர்யா ராயா, சினிமால நடிக்க போறனு கேட்டு கேலி பேசுவாங்க. ஆனால் என் உண்மையான நிறமும் என் பேச்சும் தான் மக்களுக்கு பிடிச்சி இருக்கு. இந்த விஷயமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் தெரிஞ்சிக்கிட்டேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











