பக்காவா சும்மா நச்சுனு.. ஒரு இச்.. பிரபல நடிகையின் வேறலெவல் வீடியோ !

மும்பை: நடிகை தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நடிகருக்கு பக்காவாக இச் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

என்ன தீபிகா இது.. அந்த இடத்துலயும் லுங்கி டான்ஸா - வீடியோ

ரன்வீர்சிங் மற்றும் தீபிகா இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்திற்கு பின் தங்களது காதலை வித்தியாசமான முறையில் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்களது அன்பை வெளியுலகத்திற்கு காட்டியும் வருகின்றனர் இந்த நட்சத்திர தம்பதிகள்.

கா ப்ரொடக்சன்

கா ப்ரொடக்சன்

தீபிகா படுகோனே இந்தி படத்துறையில் மிகவும் பிரபலமானவர். இவர் நடிகையாகவும் , தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார், பல படங்களில் நடித்து பல விருதுகளை நடிப்பிற்காக பெற்றிருக்கும் இவர், 2018-ல் கா என்ற ப்ரொடக்சன் ஹவுஸை ஆரம்பித்து முதல் படமா "சப்பக்" என்ற படத்தை தயாரித்தும், நடித்தும் வெளியிட்டார், இப்போது "83" என்ற படத்தை தயாரிக்கிறார் இது கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வழக்கை வரலாற்றை பற்றிய படம் இதில் ரன்வீர் சிங் கபில் தேவாகவும், தமிழ் நடிகர் ஜீவா ஸ்ரீகாந்தாகவும் நடித்துள்ளனர். மேலும் இதில் தீபிகா, கபில் தேவின் மனைவி ரோமின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரன்வீருடன் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் தீபிகா.

நட்சத்திர தம்பதிகள்

நட்சத்திர தம்பதிகள்

பத்மாவதி, ராம் லீலா, பஜிராவோ மஸ்தானி போன்ற வெற்றி படங்களில் ரீல் ஜோடியாக நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இப்படி ரீலில் வெற்றி ஜோடிகளாக நடித்து கொண்டிருந்த வேளையில் இருவரும் காதல் வயப்பட்டு ரியல் ஜோடி ஆகினர். பலருக்கு பிடித்த ஒரு ஜோடியாகவும் இன்று வரை மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளனர்.

லவ் & லவ் ஒன்லி

லவ் & லவ் ஒன்லி

ரன்பீர் கபூருடனான காதல் மிக நீண்ட மனக்கசப்புடன் முறிவடைந்தது என்று அனைவரும் பேசிக்கொண்டு இருந்த நிலையில் , சிறிது ஆண்டு கழித்து அவருக்கு ரன்வீர் சிங்கின் மீது காதல் ஏற்பட்டு பின் அது 2018-ம் ஆண்டு திருமணத்தில் போய் முடிவடைந்தது. இப்போதைக்கு இந்த தம்பதி தான் பாலிவுட்டின் கியூட் கப்புல் என சினிமா வட்டாரங்கள் பேசிவருகின்றன.

அழுத்தமான முத்தம்

அழுத்தமான முத்தம்

இந்த ஊரங்கு சமயத்தில் அனைவரும் தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நிலையில் , தற்போது தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங்கின் கன்னத்தில் கன்னமே பழுத்து போகும் அளவிற்கு அழுத்தமான முத்தத்தை கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த வாய்பிளத்துள்ள ஆண் ரசிகர்கள் மனைவி அல்லது காதலியை இதில் டேக் செய்து இதை பார், என சூசகமாக தனக்கும் இது போன்ற முத்தம் வேண்டும் என கேட்டுவருகின்றனர். யாரு தலையில என்ன எழுதியிருக்கோ அது தான் கிடைக்கும் டியர் நெட்டிசன்ஸ் என்று கமெண்ட்ஸ் வந்து கொண்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X