twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னை எனக்கு சொந்த வீடு மாதிரி.. ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!

    |

    சென்னை: சென்னை தனக்கு சொந்தவீடு மாதிரி என நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சென்னையில் தனக்கு பிடித்த விஷயங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    நடிகை தீபிகா படுகோன் 2007ஆம் ஆண்டு ஓம் ஷாந்தி ஓம் படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் அறிமுகமானார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

    Actress Deepika padukone likes Chennai people and Rasam Satham

    தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு பின் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் கடந்த ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தல போல வருமா.. வைரலாகும் அஜித்தின் புதிய போட்டோ.. ஆனா, ரசிகாஸ் நாம தப்புக் கணக்கு போட்டுட்டோமோ? தல போல வருமா.. வைரலாகும் அஜித்தின் புதிய போட்டோ.. ஆனா, ரசிகாஸ் நாம தப்புக் கணக்கு போட்டுட்டோமோ?

    இந்நிலையில் தீபிகா படுகோன் தற்போது சென்னை வந்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள வாட்ச் கடை ஒன்றில் புதிய மாடல் வாட்சை அறிமுகப்படுத்திய அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது சென்னை மக்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்ற அவர், கடந்த ஆண்டு சென்னைக்கு வந்த தான் தற்போது மீண்டும் வந்திருப்பதாகவும் இது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    சென்னை தனக்கு சொந்தவீடு போன்றது என்றும் அவர் கூறினார். மேலும் தென்னிந்திய உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது ரசம் சாதம்தான் என்றும் தீபிகா படுகோன் கூறினார். ஒரே ஒருநாள் தலைமறைவாக இருந்து வாழ்வது என்றால் சென்னை மக்களுடன்தான் வாழ்வேன் என்றும் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்தார்.

    English summary
    Actress Deepika Padukone wants to live in Chennai. Deepika padukone likes Chennai people and South indian food Rasam Satham.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X