சுடுகாட்டில் குழி தோண்டி ஈமச்சடங்கு செய்த நடிகை!
சென்னை: ஆறடி படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா சுடுகாட்டில் குழி தோண்டி ஈமச்சடங்கு செய்துள்ளார்.
இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கியுள்ள படம் ஆறடி. இந்த படத்தை ஸ்ரீசிவ குடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார், எஸ்.சுமதி, எஸ்.மோகனவேல் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் விஜய்ராஜ் நாயகனாக நடித்துள்ளார், நாயகியாக தீபிகா நடித்துள்ளார். பெண் ஒருவர் வெட்டியாள் வேலை செய்யும் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

வெட்டியாள் வேடம்
இன்று படம் ரிலீஸானதை தொடர்ந்து படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய படத்தின் நாயகி தீபிகா , இந்தப் படத்தில் நடிக்க தன்னை அணுகிய இயக்குனர் சந்தோஷ்குமார், பிணம் எரிக்கும், புதைக்கும் வெட்டியாள் வேடம் என்றார்.

வித்தியாசமாக இருந்ததால்
சேலத்தில் ஒரு பெண் இந்த வேலை செய்வதாகவும் அவரது வாழ்க்கை தழுவிய கதை என்றும் கூறினார். வித்தியாசமாக இருந்ததால் நடிக்க முடிவு செய்தேன்.

பேச்சை மீறி நடித்தேன்
ஆனால் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க தனது பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பெற்றோரின் பேச்சை மீறிதான் நடித்துள்ளேன் என்றும் கூறினார்.

தகனம் செய்யும் காட்சி
சுடுகாடு, சவம் என்றாலே கொஞ்சம் பயம்தான். ஆனால் அந்த பயத்தை தூரவைத்துவிட்டு சவ குழி தோண்டும் காட்சிகளிலும், தகனம் செய்யும் காட்சியிலும் படம் முழுக்க நடித்தேன்.

சகோதர பாசம்
என்னதான் சுடுகாட்டு பின்னணி கதை என்றாலும் அதில் ஒரு காதலும், சகோதர, சகோதரி பாசமும் இருக்கும் என்றும் நடிகை தீபிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











