'இனி வெத்துவேட்டு மாளவிகான்னு சொல்வாங்களே'?
இந்தத் தலைப்பு நல்லால்ல.. என்று கூறிய நடிகை, படப்பிடிப்புக்கே முதலில் வர மறுத்துவிட்டாராம்.
நடிகை பெயர் மாளவிகா மேனன்., படம்: வெத்துவேட்டு.
விழா படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மேனன். பிரம்மன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தார்.
முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட மாளவிகா மேனன், பின்னர் தலைப்பைக் கேட்டுவிட்டு நடிக்க மறுத்துவிட்டாராம்.

மணிபாரதி
அப்புறம் என்ன நடந்தது...? இயக்குநர் எஸ் மணி பாரதியே சொல்கிறார்:
ஒருவன் சொல்கிற பொய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாள் அதே பொய் அவனை தாக்கும் போது ஏற்பட்ட விளைவுகளை அவன் சந்திக்க வேண்டும் என்கிற கருத்தை இதில் கதையாக்கி இருக்கிறோம்.

மறுப்பு
மாளவிகா மேனனிடம் பேசி கதை சொல்லி ஓ.கே வாங்கி விட்டோம். அட்வான்ஸும் கொடுத்து விட்டோம். நல்ல கதை என்று சந்தோஷமாக சொன்ன மாளவிகா மேனன் ஷூட்டிங் நேரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

வெத்துவேட்டு மாளவிகான்னு சொல்வாங்களே...
நான் ஏற்கனவே விழா படத்தில் நடித்திருந்தேன் என்னை 'விழா மாளவிகா மேனன்' ன்னு சொல்றாங்க. வெத்து வேட்டு படத்தில் நடித்தால் 'வெத்து வேட்டு மாளவிகா' மேனன்னு சொல்லுவாங்க.. அதனால நடிக்க முடியாது என்றார்.

ஹீரோ சமாதானம்
அப்புறம் படத்தின் நாயகன் ஹரீஷ் பேசி சமாதானம் செய்தார். 'பெரும்பாலும் ஆம்பளைங்களைத் தான் வெத்து வேட்டுன்னு சொல்வாங்க, பொண்ணுங்களை சொல்ல மாட்டாங்கன்'னு சமாதானம் சொல்லி நடிக்க வைத்தோம்," என்றார்.

நல்ல கதை
இதுகுறித்து மாளவிகா கூறுகையில், "படம் பார்த்தேன். தலைப்பை வைத்து படத்தில் நடிக்காமல் போயிருந்தால் பெரிய இழப்பு எனக்குத்தான். அவ்வளவு நல்ல கதை," என்றார்.


Click it and Unblock the Notifications











