கொஞ்சமாவது கூச்ச நாச்சம் இருக்கா? நீட் விவகாரத்தில் இரட்டை வேடமா? சிக்கிய தேவதர்ஷினி!
சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் பரவி வரும் சூழலில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகை தேவதர்ஷினி பேசினார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அவர் ஏற்கனவே நீட் அகாடமி விளம்பரத்தில் நடித்த பழைய வீடியோவை வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நடிகை தேவதர்ஷினி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்துச் சென்னை தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் CJP மாணவர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகை தேவதர்ஷினி, இன்றைய காலத்து மாணவர்களைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஒரு தாயாகப் பார்த்தபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என் மகளும் பல விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவாள். அப்படி இருக்கும்போது அவளது பாதுகாப்பு என்னவாகும் என யோசித்தபோது உண்மையிலேயே என் வயிறெல்லாம் கலங்கிவிட்டது, அறவழியில் போராடும் எல்லா இளைஞர்களுக்கும் சல்யூட் என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

கொஞ்சமாவது கூச்ச நாச்சம் இருக்கா?: போராட்ட மேடையில் தேவதர்ஷினி, வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான சில மணி நேரங்களிலேயே, அரசியல் விமர்சகர் கிஷோர் கே. சாமி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை தேவதர்ஷினி ஒரு பிரபல நீட் கோச்சிங் அகாடமி விளம்பரத்தில் நடித்து, மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராகும்படி விளம்பரப்படுத்திய உள்ளார். அந்த பழைய வீடியோவை பதிவிட்டுள்ளார். "இவங்களுக்கு எல்லாம் கொஞ்சமாவது கூச்ச நாச்சமே இருக்காதா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இணையத்தில் வெடித்த சர்ச்சை: ஒருபக்கம் நீட் தேர்வுக்கு ஆள் சேர்க்கும் விளம்பரத்தில் நடித்துப் பணம் சம்பாதித்துவிட்டு, மறுபக்கம் நீட் தேர்வுக்கு எதிராக மேடையில் ஏறி 'தாய் பாசம்' பொழியலாமா என நெட்டிசன்கள் தேவதர்ஷினியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுங்களுக்கு கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இருக்காது pic.twitter.com/NwS8PlulB3
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) July 24, 2026


Click it and Unblock the Notifications