வெறித்தனம் பாட்டுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட நியாத்தி

சென்னை: விஜய் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் தயாரான பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தேவதர்ஷினியின் மகள் நியாத்தி கடம்பி, வெறித்தனம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை தேவதர்ஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது தேவதர்ஷினி பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். விஜய்க்கு அக்காவாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன ,அது படம் வந்தால் தான் நமக்கு தெரியும். ஏனெனில் தேவதர்ஷினி மெர்சல் படத்திலே நடித்து இருந்தார்.

Actress Devadharshini Daughter Niyathi Kadambi’s Bigil Dance Viral on Social Media

ஆனால் எடிட்டிங்கின் போது அவர் நடித்த காட்சி நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், பிகில் படத்தில் தேவதர்ஷினி நடித்த அனைத்து காட்சிகளும் முழுமையாக உள்ளது என இசை வெளியீட்டின் போதே தகவல் வெளியானது.

சமீபத்தில், தேவதர்ஷினி பிகில் படத்திற்காக ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தேவதர்ஷினி மகள் நியாத்தி பிகில் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு அந்த சமயத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வந்ததால் அவரால் படத்தில் நடிக்க முடியாமல் போனது தனக்கு வருத்தம் அளித்தது என்று கூறியிருந்தார்.

இருந்தாலும், சமயத்தில் சூட்டிங் நடைபெற்ற சமயத்தில், தன் மகள் நியாத்தி, பிகில் பட செட்டுக்கு வந்திருந்தபோது, விஜய்யுடன் போட்டோ எடுக்க ஆசைபட்டாராம் ஆனால், டைரக்டர் அட்லீ அதற்கு மறுப்பு தெரிவித்து தடுத்து விட்டதாகவும் கூறினார்.

பின்பு, சூட்டிங்கின் போது தேவதர்ஷினியிடம் நியாத்தி 96 படத்தில் நடித்தது குறித்து விஜய் கேட்டபோது, தேவதர்ஷினி தன் மகளை அழைத்து விஜய்க்கு அறிமுகம் செய்தாராம். அப்பொழுது தேவதர்ஷினி மகள் நியாத்தி விஜய்யுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அதனை பிகில் பட ரிலீஸுக்கு பின், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக தேவதர்ஷினி கூறியுள்ளார்.

தற்போது தேவதர்ஷினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியாத்தியின் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் நியாத்தி பிகில் படத்தில் வரும் வெறித்தனம் பாடலுக்கு வெரித்தனமாக ஆடி இருக்கிறார்.

பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகுகிறது. படத்தை தயாரித்து உள்ளனர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி நிறுவனம். படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். படம் கிட்டத்தட்ட ரூ.180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் உருவாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X