Devayani Daughter : 12ம் வகுப்பு தேர்வில் தேவயானியின் மகள் பெற்ற மார்க் எவ்வளவு தெரியுமா?
சென்னை நடிகை தேவயானியின் மகள் 12 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்.
தேவயானி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
வங்கமொழிப்படமான சாத் பென்சொமி திரைப்படத்தின் சுஷ்மா என்ற பெயருடன் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார்.

தேவயானி : இதையடுத்து தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர், தனது பெயரை தேவயானி என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து, கமல், அஜித், சரத்குமார், பார்த்திபன், முரளி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
காதல் திருமணம் : சரத்குமாரின் தேவயானி ஜோடிபோட்டு நடித்த சூர்யவம்சம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தில் நடித்த போது இயக்குநர் ராஜகுமாரை காதலித்தார். இதையடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய சின்னத்திரையில் கவனம் செலுத்த துவங்கினார்.

கோலங்கள் சீரியல் : இவர், சின்ன திரையில் நாயகியாக நடித்த கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சன் தொலைக்காட்சியில் இந்த சீரியல் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பானது. இதைத்தொடர்ந்து மஞ்சள் மகிமை, கொடி முல்லை, ராசாத்தி, புதுபுது அர்த்தங்கள் போன்ற படங்களில் நடித்தார். தற்போது, இவர் மாரி சீரியலில் முத்துப்பேச்சு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகமான மதிப்பெண் : இந்நிலையில் தேவயானியின் மூத்த மகள் இனியா இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில், அவரின் மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இனியா 600 க்கு 498 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பலரும் ரசிகர்கள் தேவயானியின் மகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கடவுள் தான் காப்பாற்றினார் : சமீபத்தில் தேவயானி அளித்த பேட்டியில், என்னுடைய இரண்டாவது மகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்ததாகவும், அந்த நேரத்தில் அவளுடைய ரத்தத்தில் இருக்கும் அணுக்களின் அளவு குறைந்துவிட்டதால், மிகவும் பதறிப்போய்விட்டேன், அந்த நேரம் கடவுள்தான் என் குழந்தையை காப்பாற்றினார் என்றார்.


Click it and Unblock the Notifications











