Devayani: நடிகை தேவயானி மீண்டும் நாயகியாக நடிக்கும் ‘நிழற்குடை’.. அட படத்தோட கதை இதுவா!
சென்னை: நடிகை தேவயானி அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். 90களில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி, ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய நடிப்பாலும் கவர்ச்சியாலும் அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். ஒரு கட்டத்தில் தன்னுடைய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு குழந்தைகள் உள்ளனர்.
திருமணமான நிலையிலும் தொடர்ந்து படங்களிலும் சீரியல்களிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து வரும் தேவயானி நடிப்பில் அடுத்ததாக நிழற்குடை என்ற படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானி நாயகியாக இணைந்துள்ளார்.

நடிகை தேவயானி: நடிகை தேவயானி அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 90களின் முன்னணி நாயகியாக நடித்தவர். பல வெற்றி படங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர். இவரது நடிப்பு, அழகு, கவர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் ரசிகர்களை சிறப்பாகவே கவர்ந்தன. துவக்கத்தில் கொழுக் மொழுக் என்று இருந்த தேவயானி, ஒரு கட்டத்தில் ஸ்லிம்மாகி அதிரடி காட்டினார். தொடர்ந்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்த தேவயானி, ஒரு கட்டத்தில் தன்னுடைய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ள நிலையில் தொடர்ந்து படங்களிலும் சீரியல்களிலும் தேவயானி நடித்து வருகிறார்.
சீரியல் நாயகி: இவரது நடிப்பில் கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் நாயகியாக புதிய படத்தில் இணைந்துள்ளார். தற்போது படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார் தேவயானி. கடந்த 2018ம் ஆண்டில் விவேக் ஜோடியாக எழுமின் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாயகியாக நிழற்குடை என்ற படத்தில் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜித் ஹீரோவாகவும் கண்மணி மனோகரன் மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ளனர். இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

மீண்டும் நாயகி: தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நரேன் பாலக்குமார் இசையமைத்துள்ளார். வெளிநாட்டு மோகத்தால் தடம் மாறும் இளைய தலைமுறையையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தர்ஷன் என்பவர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு பிறகு நாயகி: சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானி இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் அவரது கேரக்டர் எப்படி அமைந்திருக்கும் என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. தற்போதும் தன்னுடைய உடலை சிறப்பாக பராமரித்து வருகிறார் தேவயானி. அதனால் அவருக்கு இந்தப் படம் ஹீரோயினாக மிகச்சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











