Devayani Interview: அந்த நடிகையோட ஆழமான நட்பு இருந்தது.. நடிகை தேவயானி உருக்கம்!
சென்னை: நடிகை தேவயானி விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர்.
குடும்ப பாங்கான கேரக்டரா கூப்புட்றா தேவயானியை என்ற பிம்பத்தை தமிழில் மட்டுமில்லாமல் பிற தென்னிந்திய மொழிப்படங்களிலும் ஏற்படுத்தியவர்.

இயக்குநர் ராஜகுமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தேவயானி, தொடர்ந்து சீரியல்களிலும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
நடிகை ரம்பாவை பாராட்டிய தேவயானி: நடிகை தேவயானி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் ராஜகுமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தேவயானி, தொடர்ந்து சீரியல்களிலும் லீட் கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், ப்ரெண்ட்ஸ் படங்களில் இணைந்து நடித்துள்ள தேவயானி, நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிகை ரம்பாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் தேவயானிக்கு விஜய்யை நிச்சயம் செய்த சூழலில், தன்னுடைய காதலை ரம்பா விட்டுக் கொடுப்பதாக காட்சிகள் அமைந்திருக்கும். விஷயம் கேள்விப்பட்டு, ரம்பாவையும் விஜய்யையும் தேவயானி சேர்த்து வைப்பார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டை விஜய்க்கு கொடுத்தது.
இந்தப்படத்தில் நடித்த தேவயானி மற்றும் ரம்பா இருவருமே முன்னணி நடிகைகளாக இருந்தபோது இந்தப் படத்தில் இணைந்திருந்தனர். இதனால் இவர்கள் இருவருக்குமே பிரச்சினைகள் வரும் என்று படக்குழுவினர் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து படத்தின் இயக்குநரே தன்னிடம் பேசியதாக தேவயானி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் தான் ரம்பாவுடன் சண்டை போடுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தான் இயக்குநருக்கு பதிலளித்ததாகவும் தேவயானி கூறியுள்ளார்.
இந்தப் படம் துவங்கியதில் இருந்து ரம்பாவுடன் சிறப்பான புரிதல் இருந்ததாகவும் இருவரும் நல்ல தோழிகளாகவே பழகியதாகவும் தேவயானி கூறியுள்ளார். ரம்பா மிகவும் ஸ்வீட்டானவர் என்றும் அதிர்ந்துகூட பேசமாட்டார் என்றும் தேவயானி, ரம்பாவிற்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார். அதனால் அவருடன் இணைந்து நடித்தது மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் தேவயானி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை தேவயானி, அஜித் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், அஜித்துடன் நடித்திருந்த காதல் கோட்டை படம் அவருக்கு தமிழில் மிகப்பெரிய ஹிட்டையும் வரவேற்பையும் கொடுத்தது. இந்தப் படத்தில் கமலி என்ற அவரது கேரக்டர் தற்போதும் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் கேரக்டராக உள்ளது. பார்க்காமல் காதலிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக இந்தப் படம் அமைந்தது. தேவயினயின் நடிப்பும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











