வீட்டிலேயே கவனமாக இருங்கள்.. தேவயானி நடித்த கொரோனா விழிப்புணர்வு விளம்பரம் !

சென்னை: தேவயானி நடித்த அரசு கொரோனா விழிப்புணர்வு விளம்பரப்படம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

Recommended Video

அன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி- வீடியோ

இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் தேவயானி போன்ற பிரபல கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது.

இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.

ஜெயபாலன்

ஜெயபாலன்

இந்த விளம்பரப்படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து தான் நடித்திருப்பதாகவும் . ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று கூறியுள்ளார். வீட்டிலேயே கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

இ.வி.கணேஷ்பாபு

இ.வி.கணேஷ்பாபு

பல வருடங்களுக்கு முன்பு "பாரதி" படத்தில் தனக்கு மருமகனாக நடித்து இப்போது "கட்டில்" திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு தான் இப்பொழுது தேவயானி பங்கேற்ற "கவசம் இது முகக்கவசம்" பாடலையும் இந்த விளம்பரத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார்.

எண்ணமங்கலம்

எண்ணமங்கலம்

செழியன் குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் குடும்பத்தோடு அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருவதால் . இடைப்பட்ட நாட்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சென்றிருக்கிறார் தேவயானி .

குடும்பத்துடன் விளையாட்டு

குடும்பத்துடன் விளையாட்டு

கிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக இப்போது அனுபவித்து வருகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது. கிராமத்து சமையல் செய்வது, குழந்தைகளோடு, கணவனோடு விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம் என்று பெருமையாக சொல்லி உள்ளார் தேவயானி

காத்திருப்பு

காத்திருப்பு

மகாபாரதம், ராமாயணம் போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பாகிறது. இதை குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.கொரோனா வைரஸிடமிருந்து நாமெல்லாம் மீண்டு ஊரடங்கு தளர்த்தப் பட்ட பிறகு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன் என்று ஊடக நண்பர்களுக்கு தெரிவித்து உள்ளார் தேவயானி. நிச்சயமாக தமிழக மக்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் தேவயானி நடித்த பல படங்கள் இன்னமும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. குடும்ப பாங்கான முகம் , எளிமையான தோற்றம் என்று நிறைய ரசிகர்களை கொண்ட தேவயானி மீண்டும் பல படங்களில் வருவார் என்று எதிர்பார்க்க ப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X