Devayani: நடிகை தேவயானி ரசித்து ரசித்து கட்டியுள்ள பண்ணைவீடு.. க்யூட்!

சென்னை: நடிகை தேவயானி தொட்டாச்சிணுங்கி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

இவர் முதன்முதலில் மலையாள சினிமாவில்தான் தன்னுடைய என்ட்ரியை துவங்கியுள்ளார். கின்னரிபுழையோரம் என்ற மலையாளப் படத்தில்தான் இவரது அறிமுகம் நிகழ்ந்தது.

Actress Devayanis Farm house in her native place makes fans attractive

ஆசிரியராக தன்னுடைய கேரியரை துவங்கிய தேவயானி, நடிகையாகி தற்போது சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

தேவயானியின் பண்ணை வீடு: நடிகை தேவயானி மலையாளத்தில் கின்னரிபுழையோரம் என்ற படத்தில்தான் தன்னுடைய அறிமுகத்தை செய்தார். முதல் படமே இவருக்கு சிறப்பான வெற்றியையும் ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றுத் தந்த நிலையில், தொடர்ந்து தமிழில் தொட்டாச்சிணுங்கி என்ற படம் மூலம் அறிமுகமானார். காதல் கோட்டை இவரது சினிமா கோட்டைக்கு சிறப்பான அஸ்திவாரத்தை கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார்.

குண்டாக கொழுக் மொழுக் என்றிருந்த தேவயானி, ஒரு கட்டத்தில் உடலை ஸ்லிம்மாக்கிக் கொண்டு நடித்தார். 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக நடித்த தேவயானி, குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கு மிகவும் சிறப்பாக பொருந்தினார். நேற்றைய தினம் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவருக்கு ஏராளமான பிரபலங்கள், ரசிகர்கள் தங்கனின் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார் தேவயானி.

இவரது சின்னத்திரை பிரவேசம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கோலங்கள் என்ற தொடர் மூலம் பெண்ணுரிமை எவ்வளவு முக்கியம் என்பதையும் இவர் வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் இவரது மிடுக்கான, நடை, உடை, பாவனைகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, தொடரையும் வெற்றித் தொடராக மாற்றியது. பல ஆண்டுகள் இந்தத் தொடர் ரசிகர்களை கட்டிப் போட்டது. ஆசிரியராக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர், நடிகையாக மாறி, தொடர்ந்து தற்போது சீரியல்களில் கலக்கி வருகிறார்.

சூரியவம்சம், நீ வருவாய் என போன்ற படங்களில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் தேவயானி. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒரு கிராமத்தில் 5.30 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் விவசாயம் செய்து வருகிறார் தேவயானி. அதன் நடுவில் பிரம்மாண்டமான பண்ணை வீடு ஒன்றையும் கட்டியுள்ளார்.

தோட்டம் மற்றும் விவசாய நிலங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த பண்ணை வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், வீட்டை அவர் மிகவும் அழகாக ரசித்து கட்டியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தன்னுடைய படங்களில் சிறப்பான கேரக்டரை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தேவயானி. அவரது வீடும் அவரை போலவே சிறப்பாகத்தான் இருக்கு என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X