என்னை அம்மா மாதிரி பாத்துப்பான்.. விபத்தில் டிரைவர் இ*றந்தது குறித்து நடிகை தேவி பிரியா வேதனை

சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகவே நடித்து வருபவர் நடிகை தேவி பிரியா. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ரொம்பவே அதிகம். அதுவும் இவர் இந்த ஆண்ட்ராய்டு காலத்திற்கு முன்னர் இருந்தே நடித்து வருவதால் இவருக்கு குடும்ப ரசிகர்கள் ரொம்பவே அதிகம். இவரது கார் விபத்துக்குள்ளாகி, இவரது காரின் டிரைவர் மற்றும் டிரைவரின் நண்பர் என இருவரும் சம்பவ இடத்திலேயே உ*யிரிழ்ந்தனர். இது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரையும் கவலைக்கு ஆளாக்கி உள்ளது. இந்த விபத்தில் தேவி பிரியாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

விபத்து குறித்தும் விபத்தில் இ*றந்துபோன அவர்து டிரைவர் முத்து குறித்தும் அழுது கொண்டே ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார் தேவி பிரியா. அவர் கூறுகையில், " முத்து என்னிடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியில் உள்ளார். அவர் எனக்கு ஒரு தம்பி போன்றவர். எப்போது பாசமாகவும் அக்கறையாகவும் இருப்பான். என்னை அவனது அம்மா போல பார்த்துக் கொண்டான். பாண்டிச்சேரியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு தேனிக்கு படப்பிடிப்புக்கு போக வேண்டும் என்று நாங்கள் காரிலேயே சென்றோம்.

Actress Devi Priya Explains How Her car Met accident And How Her Driver Take Care

வழக்கமாக பகலில் தான் காரில் செல்வோம், இம்முறை இரவில் செல்ல வேண்டி இருந்ததால், முத்து தனது நண்பர் மற்றொரு டிரைவரையும் அழைத்துக் கொண்டு வந்தார். இருவர் இருந்தால் மாறி மாறி கார் ஓட்ட வசதியாக இருக்கும் என்று நாங்கள் மூவரும் போய்க் கொண்டு இருந்தோம். இப்படி இருக்கையில் டயர் பஞ்சர் ஆகவே, டயரை கழட்டி மாற்றிக் கொண்டு இருந்தார்கள்.

கடைசி இரண்டு நிமிடங்கள்: நான் எனது காருக்குள் இருந்தேன், நான் திரும்பி பார்த்தேன் முத்து உடன் வந்த அவரது நண்பர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார். நான் இறங்கினால் அவருக்கு சௌகரியமாக இருக்காது என்று, இறங்கவில்லை. அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில் எனது கார் இரண்டு அடி முன்னால் நகர்ந்தது. எனக்கு என்ன இவ்வளவு சத்தம் வருகிறது என்று யோசித்த பின்னர்தான் காரில் யாரோ மோதி உள்ளார்கள் என்று தெரிந்தது. என்ன யாருமே எதுவுமே சொல்லாமல் இருக்கிறார்கள் என்று இறங்கி பார்த்தேன்.

கண்ணீர்: முதலில் காரின் வலது புறத்தில் பார்த்துவிட்டு அடுத்து இடது புறத்தில் பார்த்தபோதுதான் தெரிந்தது, இவர்கள் இருவரும் காயம் பட்டு கீழே விழுந்து கிடந்தார்கள்" என்று கண்ணீருடனே தெரிவித்தார். மேலும் காவல்துறை இது தொடர்பாக விசாரித்துக் கொண்டு இருப்பதாகவும் விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்றும் தெரிவித்ததாகவும் அந்த பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X