நடிகை தேவி பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஓட்டுநர்
சென்னை: பெரம்பலூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி இருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக் கொள்ளானதில், பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியாவின் கார் விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் உயிரிழந்தார்.
நடிகை தேவி பிரியா: பல சீரியல்களில் வரும் தொலைக்காட்சி தொடர்களில் சீனியர் நடிகையாக வலம் வருபவர் தேவி பிரியா. இவர் நடிகையாக மட்டுமில்லாமல் நடிகையும், டப்பிங் கலைஞராக பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்த தேவிப்பிரியா, செல்லமே, அண்ணாமலை, அத்திப்பூக்கள், சந்திரலேகா என பல்வேறு சீரியர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கார் விபத்து: இந்நிலையில் நடிகை தேவி பிரியா, சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடிரென பஞ்சமானது. இதையடுத்து கார் ஓட்டுநர் முத்துகணேஷ் மற்றும் நடிகை தேவிபிரியாவின் உதவியாளர் திவாகரும் இருவரும் காரின் டயரை மாறிக்கொண்டிருந்தனர்.
ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி: அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஓட்டுநர் முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை தேவிப்பிரியா சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அவரது உதவியாளர் திவாகர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து நடிகை தேவிபிரியா கொடுத்த தகவலின் பேரில், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த வந்த பாடலூர் போலீசார் ஓட்டுநரின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த உதவியாளர் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கார் ஓட்டுநர் முத்துகணேஷின் குடும்பத்திற் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சென்னை ஐயப்பன்தாங்கலில் இருந்து விரைந்து வந்தனர்.கார் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சோகத்தில் நடிகை தேவிபிரியா மீளா துயரத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











