சமூக சேவகியாக மாறிய தர்ஷா குப்தா… குவியும் பாராட்டு!

சென்னை : விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியாக சென்று உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அதே போல இவர் ராயபுரத்தில் வருமானமின்றி தவித்த மீனவ குடும்பத்திற்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.

அடக்க ஒடுக்கமாக

அடக்க ஒடுக்கமாக

ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த தொடரில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக அடுக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

பிரபலமானார்

பிரபலமானார்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2-வது சீசன் சீசனில், இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கி வருகிறார்.

கிளாமர்

கிளாமர்

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், பட வாய்ப்புக்காக கவர்ச்சியை தூக்கலாக காட்ட ஆரம்பித்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் சீரியல்களில் நடித்து பிரபலமானதை விடவும் இன்ஸ்டாகிராமில் பலவித வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

சமூகசேவகி

சமூகசேவகி

தற்போது தர்ஷா குப்தா ஒரு சமூகசேவகியாக மாறி உள்ளார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இவர் உதவிகளை செய்து வருகிறார். சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொவரு பகுதிக்கும் தானாக சென்று உணவு இன்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல, இவர் ராயபுரத்தில் வருமானமின்றி தவித்த மீனவ குடும்பத்திற்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X