Dharsha gupta: கவுத்துப் புட்டீயே தங்கம்.. தர்ஷா குப்தாவின் வித்தியாசமான போட்டோஷூட்!
சென்னை: சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு தாவியவர்களில் நடிகை தர்ஷா குப்தாவும் ஒருவர். ருத்ரதாண்டவம் என்ற படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்துவரும் தர்ஷா குப்தா நடிப்பில் அண்மையில் ஓ மை கோஸ்ட் படம் வெளியானது.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தர்ஷா குப்தா, கான்செப்ட் வகையில் பல புகைப்பட சூட்களை எடுத்து புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தர்ஷா குப்தா: நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவியின் பிரபல சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் சன் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தின் மூலம் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தர்ஷா குப்தாவிற்கு சிறந்த என்ட்ரியை கொடுத்தது.
சினிமாவில் தர்ஷா: தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா, சன்னி லியோன் லீட் கேரக்டரில் நடித்திருந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சி மட்டுமே போதாது என்ற விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த காட்சியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

கவுத்துப் புட்டீயே தங்கம்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் தர்ஷா குப்தா, குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள், ரீல்ஸ் போன்றவை அதிகமான வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
இன்ஸ்டாகிராமில் 22 லட்சம் பாலோகளை வைத்து இருக்கும் தர்ஷா குப்தா. வித்தியாசமான போட்டோஷூட்டை நடத்தி உள்ளார். அதாவது ஜாக்கெட் போடாமல் பட்டுப் புடவையை போர்த்திக்கொண்டு அழகு தேவதைப்போல காட்சி அளித்துள்ளார். அந்த போட்டோஷூட் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து தர்ஷாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











