Dharsha Gupta: தர்ஷா குப்தாவின் நீச்சல் குள வீடியோ பாத்தீங்களா? இனிமேல் கிளாமர் வீடியோக்கள் வரும் போலயே!
சென்னை: நடிகை தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் சின்னத்திரையில் இருந்து தனது பயணத்தை தொடங்கினாலும், வெள்ளித்திரையில் இன்னும் இவருக்காக பிரேக் கிடைக்கவில்லை. இதனால் அதற்காக முயற்சித்து வரும் தர்ஷா குப்தா தனது ரசிகர்களை குஷி படுத்துவதற்காக அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, மிகவும் கிளாமராக இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
நடிகை தர்ஷா குப்தா தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர். இது மட்டும் இல்லாமல் இணையவாசிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றவர். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல அறிமுகத்தை மக்கள் மத்தியில் பெற்றார். சினிமாவில் தனக்கான இடத்தை நிறுவ வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் தர்ஷா குப்தாவுக்கு, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ்: இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தர்ஷா குப்தாவோ, பிக் பாஸ் வீட்டில் சில வாரங்கள் மட்டுமே இருந்தார். அவர் இருந்த சில வாரங்களிலும் அவரால் பிக் பாஸ் வீட்டிற்குள் மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தர்ஷா குப்தா எப்போதும் கிளாமரில் கவனம் செலுத்தும் நடிகையாக உள்ளார். பிக் பாஸ் வீட்டிலும் அவரது கிளாமர் படலம் தொடர்ந்தது. ஆனால் அது சில வாரங்களுக்கு மேல் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கிளாமர் குயின்: இது மட்டும் இல்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு சில வாரங்களுக்கு முன்னரும் அவர் வீட்டிற்குள் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. களமிறங்கும் போது ஃபயராக பேசிய தர்ஷா குப்தா அதன் பின்னர், செட் பிராப்பர்ட்டி போல வீட்டிற்குள் இருந்து விட்டு வெளியேறினார்.பிக் பாஸ் நினைத்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும், இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், இவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்களால், ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வைத்து வருகிறார். அதாவது கிளாமராக புகைப்படங்களை பகிர்வது, கிளாமராக வீடியோக்களை பகிர்வது என அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே கிளாமராக தான் இருக்கும்.

நீச்சல் குளியல் வீடியோ: இப்படியான நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவுக்கு இன்ஸ்டாகிராம் வாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் அந்த வீடியோவுக்கு லைக்குகளை வாரி வழங்கியுள்ளார்கள். கழுத்தில் மல்லிகைப்பூ மாலை, நெஞ்சில் டாட்டூ என அந்த வீடியோவில் அவரே குளோசப் ஷாட் எல்லாம் வைத்து பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் அவர் குளிக்கும் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், என்னடா, தர்ஷா குப்தா இந்த அளவுக்கு இறங்கி விட்டார், சீக்கிரம் ஏதாவது படத்தில் கிளாமர் கதாபாத்திரத்திற்காவது வாய்ப்பு கொடுங்கள் என பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











