தண்ணீரில் பூத்த தாமரையாக இரவு வெளிச்சத்தில் ஜொலிக்கும் தர்ஷா குப்தா.. வேற லெவல் போட்டோஸ் பகிர்வு!
சென்னை : சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு தாவியவர்களில் ஒருவராக உள்ளார் தர்ஷா குப்தா.
Recommended Video
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் மிகவும் ஆக்டிவ். பல கான்செப்ட்களில் இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்களில் இளசுகள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
வளைவு நெளிவுகளை காட்டி, ரசிகர்களை கவர்ந்திழுப்பதோடு, பட வாய்ப்புகளையும் கவர்ந்து வருகிறார் தர்ஷா குப்தா.

நடிகை தர்ஷா குப்தா
நடிகை தர்ஷா குப்தா அவளும் நானும் என்ற சின்னத்திரை தொடர்மூலம்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து முள்ளும் மலரும், செந்தூரப்பூவே போன்ற தொடர்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். முன்னதாக பள்ளி படிக்கும் காலகட்டத்திலேயே மாடலிங்கில் நுழைந்த இவர், அதன்மூலம்தான் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சினிமா வாய்ப்புகள்
சினிமா வாய்ப்புகளுக்காக தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேரமாக சினிமா வாய்ப்புகளை பெறும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். ருத்ரதாண்டவம் படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அசோக் குமார் ஹீரோவாக நடிக்கும் த்ரில்லர் மூவி ஒன்றில் கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பிரபலம்
சின்னத்திரை, வெள்ளித்திரை என இவர் பிரபலமாக இருந்தாலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில்தான் இவர் பிரபலம் அதிகமாக காணப்படுகிறது. இவரை இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு இவர் பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார்.

பண்டிகைகால புகைப்படங்கள்
தொடர்ந்து ஒவ்வொரு பண்டிகைக்கும் அந்தப் பண்டிகையின் சிறப்பை வெளிப்படுத்தும்வகையில் இவர் புகைப்படங்களை பதிவிடுவார்.இதுபோல ஹோலி, சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளில் சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டார்.

ராதையாக மாறிய தர்ஷா
குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின்போது ராதையாக மாறி புகைப்படங்களை வெளியிட்ட இவர், இரு தினங்களுக்கு முன்பு வனவாசத்தில் இருக்கும் சீதையை வெளிப்படுத்தும்வகையில் புகைப்படங்களை பதிவிட்டார். இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் அதிகமான லைக்ஸ்களை அள்ளின.

குளத்தில் குளித்த தாமரை
இந்நிலையில், குளத்தில் குளிப்பது போன்ற புதிய போட்டோஷுட்டை எடுத்துள்ளார் தர்ஷா குப்தா. நீராடும் வேளையில் என்ற கேப்ஷனுடன் இந்தப் புகைப்படங்களை இவர் பதிவிட்டுள்ளார். ஈரமான உடையுடன் குளிப்பது போன்ற பாவனைக் காட்டும் தர்ஷாவின் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை நனைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











