மீன்குட்டியாய் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
சென்னை : நடிகை தர்ஷா குப்தா சீரியலில் இருந்து சினிமாவிற்கு தாவியவர்களில் முக்கியமானவர்.
Recommended Video
ருத்ரதாண்டவம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் இவர், அடுத்தடுத்த வித்தியாசமான கான்செப்ட்களில் புகைப்படங்கள், வடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை தர்ஷா குப்தா
நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய கல்லூரி காலத்திலேயே மாடலிங்கில் ஈடுபட்டு அதன்மூலம் சீரியல்களில் வாய்ப்புகளை பெற்றவர். சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் இவர் நடிப்பில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப் பூவே போன்ற சீரியல்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன.

தொடர் சினிமா வாய்ப்புகள்
தொடர்ந்து சீரியல்களில் நடித்துவந்த இவருக்கு சினிமாவிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் சீரியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

பிக்பாஸ் சீசன் 6ல் தர்ஷா?
அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து ஆக்டிவில் உள்ள நிலையில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

ராதை -சீதை போஸ்
கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதை வேடத்தில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டார் தர்ஷா குப்தா. தொடர்ந்து வனவாசத்தில் இருக்கும் சீதையை வெளிப்படுத்தும் வகையில் புதிய போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படத்தையும் வெளிட்டார்.

இந்திரலோகத்து ரம்பை
தொடர்ந்து இந்திரலோகத்து ரம்பையோ என்றும் தோன்றும் வகையில் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை ஃப்ரீஸ் செய்தார். இந்நிலையில் தற்போது புதிய கெட்டப்பில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த உடையில் மீன் போன்று காட்சயளிக்கிறார் தர்ஷா.

சிறப்பான புகைப்படங்கள்
மேலும் நம்முடைய தனித்துவம் மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். மேலும் ஹாப்பி சண்டே என்றும் அன்பை பகிர்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











