கவர்ச்சிக்குத்தான் லாயக்குனு யார் சொன்னா..அந்தரத்தில் பறந்து சண்டை போட்ட தர்ஷா குப்தா!
சென்னை : நடிகை தர்ஷா குப்தா, அந்தரத்தில் பறந்து பறந்து சண்டை போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஆர் யுவன் இயக்கிய ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கதையின் நாயகியாக சன்னி லியோன் நடித்து உள்ளார். இப்படத்தில் ராணி கதாபாத்திரத்தில் தோன்றும் சன்னி லியோன் கவர்ச்சி விருந்து அளித்தது மட்டுமில்லாமல், அதிரடி சண்டை காட்சிகளிலும் அலப்பறை செய்து உள்ளார்.
இப்படத்தில், ஜி பி முத்து, சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தர்ஷா குப்தா
ஓ மை கோஸ்ட் படத்தில் இன்ஸ்டா குயின் தர்ஷா குப்தா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாடல் அழகியான தர்ஷா குப்தா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் நடித்திருந்தார். இந்த தொடரில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக வந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இணையத்தில் படு ஆக்டிவ்
இந்த தொடரை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா கொரோனா காலத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி உதவி செய்தார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

ருத்ரதாண்டவம் படத்தில்
தர்ஷா குப்தா இணையத்தில் பகிர்ந்த போட்டோவால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜி மோகன் இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்டு ரிஷியின் மனைவியாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா. எதிர்மறையான பல விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் ஓரளவு வசூலை பெற்றுத்தந்தது.

அந்தரத்தில் பறந்து பறந்து
ருத்ரதாண்டவம் படத்தைத் தொடர்ந்து ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ள தர்ஷா குப்தா, ஆக்ஷன் காட்சிகளில் டூப்பே இல்லாமல் நடித்துள்ளார். அந்தரத்தில் தலைகீழாக பறந்து பறந்து சண்டை போடும் அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். மேலும், இந்த வீடியோ, கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள் என்று கூறிய அனைவருக்கும் இந்த OMG படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். கவர்ச்சிக்கு மட்டும் தான் லாயக்கு என கிண்டலடிக்கும் நெட்டிசன்களுக்கு இந்த வீடியோ மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











