கண்ணடித்து… முத்தம் கொடுத்து சூடேத்தும் தர்ஷா குப்தா… ரொமான்டிக் வீடியோ !
சென்னை : விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா ரொமான்டிக்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் போஸ்ட் போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவரை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றாமல் விதவித போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார் தர்ஷா குப்தா

அடக்க ஒடுக்கமாக
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த தொடரில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

பிரபலமானார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2-வதுசீசன் சீசனில், இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கி வருகிறார்.

கிளாமர் தூக்கலாக
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், பட வாய்ப்புக்காக கவர்ச்சியை தூக்கலாக காட்ட ஆரம்பித்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் சீரியல்களில் நடித்து பிரபலமானதை விடவும் இன்ஸ்டாகிராமில் பலவித வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

கண்ணடிக்கும் வீடியோ
இளைஞர்கள் மத்தியில் அழகு தேவதையாக வலம் கொண்டு இருக்கிறார் தர்ஷா குப்தா. தற்போது இவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணடித்து சூடேத்தும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











