ஹரீஷ் கல்யாண் பட ஹீரோயினை விரட்டி விரட்டி தாக்கிய மயில்.. மரண பயத்தில் அலறிய நடிகை.. வைரல் வீடியோ!
சென்னை: ஹரீஷ் கல்யாண் பட ஹீரோயினை மயில் ஒன்று விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் டிகங்கனா சூர்யவன்ஷி. 2015ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்தி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து ஃபிரை டே என்ற படத்தின் மூலம் இந்தியில் பிரபலமானார். அடுத்து அவரது நடிப்பில் வெளியான ஜலேபி படம் பெரும் ஹிட்டானது.

தனுசு ராசி நேயர்களே..
தமிழில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் பிஸியாக உள்ளார் நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி.

விரட்டி விரட்டி தாக்கிய மயில்
இந்நிலையில் டிகங்கனாவின் வீடியோ ஒன்று இணையத்தை அதிர வைத்து வருகிறது. அதவாது மயில் ஒன்று நின்றிருக்க அதன் அருகில் செல்கிறார் டிகங்கனா சூர்யவன்ஷி. அப்போது ஆக்ரோஷமான மயில் அவரை விரட்டி விரட்டி தாக்கியது.

மயிலுக்கு என்ன கோபம்?
இதனை சற்றும் எதிர்பாராத டிகங்கனா சூர்யவன்ஷி, செமயாக அலறிக்கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்படி என்ன அந்த மயிலுக்கு உங்கள் மேல் கோபம் என கேட்டு வருகின்றனர்.
மயில் கட்டிப்பிடிக்கிறது
ஆனால் இந்த வீடியோ குறித்து பதில் அளித்துள்ள டிகங்கனா சூர்யவன்ஷி, நான் ரொம்பவே பயந்துவிட்டேன். ஆனால் என் அம்மா மயில் உன்னை கட்டிப்பிடிக்கிறது என்று கூறி என்னை சமாதானப்படுத்தினார் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











