Dimple hayathi: கடைசி வரைக்கும் செட் ஆகலை.. ஆனா மூணு வாரம் கழிச்சி.. டிம்பிள் ஹயாதி சொன்ன விஷயம்!
ஐதராபாத்: நடிகை டிம்பிள் ஹயாதி தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது. தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான கில்லாடி படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக உள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் தன்னுடைய பிட்னஸை மேம்படுத்தும் பல முயற்சிகளில் டிம்பிள் ஹயாதி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய பிட்னஸ் குறித்து அவர் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் தனக்கு பொருந்தாத உடை ஒன்றை எடையை குறைத்து தான் எப்படி தனக்கு பிட்டாக மாற்றினேன் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடன் அவர் பேசியுள்ளதை பார்க்க முடிந்தது.

நடிகை டிம்பிள் ஹயாதி: நடிகை டிம்பிள் ஹயுதி அடுத்தடுத்து பாலிவுட்டிலும் கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி காடாக அடுத்தடுத்து ரசிகர்களை தன்னுடைய படங்கள் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் சூடேற்றி வருகிறார். டோலிவுட்டில் கில்லாடி படம் மூலம் ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார். பாலிவுட்டில் தனுஷின் அட்ராங்கி ரே படம் மூலம் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழில் கடந்த 2019ம் ஆண்டில் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான தேவி 2 படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
தமிழில் அடுத்தடுத்த படங்கள்: தொடர்ந்து தமிழில் விஷாலுடன் இணைந்து வீரமே வாகை சூடும் படத்திலும் ஹீரோயினாக நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் மாடலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் டிம்பிள் ஹயாதி. இதுமட்டுமில்லாமல் ஐட்டம் பாடல்களுக்கும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டு ரசிகர்களின் கனவுகளிலும் வலம்வந்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவரது அடுத்தடுத்த பதிவுகளின்மூலம் ஒரு மில்லியன் பாலோயர்களை இவர் நெருங்கியுள்ளார்.
பிட்னசில் அக்கறை: பிட்னசில் மிகுந்த அக்கறை கொண்டவர் டிம்பிள் ஹயாதி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களுடன் பிட்னஸ் வீடியோக்களையும் அதிகமாக பார்க்க முடிகிறது. தான் ஜிம்மில் செய்யும் பயிற்சிகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வெளியிட்ட வீடியோவில் அந்தரத்தில் தொங்கியபடி இவர் செய்திருந்த ஒர்க்அவுட் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இதில் இவரது அழகும் கவர்ச்சியும் சேர்ந்துக் கொள்ள இந்த வீடியோ அதிகமான லைக்ஸ்களை பெற்றது. மேலும் தன்னுடைய பிட்னசிற்காக டிம்பிள் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதும் தெரியவந்தது.
பொருந்தாத உடை: இதனிடையே, தன்னுடைய பிட்னஸ் மற்றும் ஜிம் அனுபவம் குறித்து வீடியோ ஒன்றில் டிம்பிள் பேசியுள்ளது தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகப்படியாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு பொருந்தாத உடையை பிட்டாக மாற்றுவதற்கு அவர் மூன்று வாரங்கள் தொடர்ந்து கடுமையான ஃபிட்னஸ் பயிற்சியை செய்ததாகவும் இதையடுத்து அந்த உடை தற்போது சரியாக பொருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த உடையை ஜிம்மிற்கு அணிந்து வந்ததாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











