ஒரு வேலை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டேன்.. டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு நிலைமையா?

சென்னை: உதய கீதம் படத்தின்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை டிஸ்கோ சாந்தி,திறமையான நடிகையாக இருந்த போதும் வாய்ப்பு கிடைக்காததால்,கவர்ச்சி நடத்திற்கு ஆட்டம் போட்டு கவர்ச்சி நடிகையாக மாறினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி பல மொழிகளில் நடித்த டிஸ்கோரி சாந்தி, கணவர் மறைவுக்கு பின் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டத்தை கண்ணீருடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

ஐட்டம் பாடலுக்கு பெயர் போன நடிகை டிஸ்கோ சாந்தி, பிரபல பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகள் ஆவார். இவர் இறந்த பிறகு, குடும்பத்தை காப்பாற்ற 7 வயதில் சினிமாவில் நடித்தார். துவக்கத்தில் நாயகியாக நடித்து வந்த இவர்,அது கைக்கொடுக்காத நிலையில், ஐட்டம் பாடல்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. பின் காலத்தில் அதையே தன்னுடைய கேரியராக மாற்றிக்கொண்டார்.

disco shanthi interview

நடிகை டிஸ்கோ சாந்தி: இவர் 1996ம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து விலகி குடும்பத்தோடு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.

இந்த தம்பதிக்கு, அக்ஷரா,என்ற மகளும், ஷஷாங்க் , மேகம்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீஹரி கல்லீரல் பாதிப்பால் காரணமாக உயிரிழந்தார்.

மன அழுத்தத்தால் தினமும் குடித்தேன் தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் டிஸ்கோ சாந்தி, தன்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு

தான் குடிக்கு அடிமையாக இருந்ததாகவும், வாழவே பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். என் கணவரின் மறைவு என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. படுத்தால் தூக்கமே வராது இதனால், தினமும் குடித்துவிட்டுத்தான் தூங்குவேன். அவர் உயிரோடு இல்லாததை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றார்.

சாப்பாட்டுக்கே கஷ்டம்: மேலும், என் கணவர் இறந்த போது, அவருடைய வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் தான் இருந்தது. அது என் வீட்டு செலவுக்கு,வேலை ஆட்களுக்கு கொடுப்பதற்குத்தான் சரியாக இருந்தது. இதனால் ஒருவேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். இதனால் , இரண்டு மூன்று இடத்தைக்கூட விற்றுவிட்டேன். ஏன் என்றால் என் குழந்தைகள் கஷ்டப்படுவதை நான் விரும்பாததால் இடத்தை விற்றுத்தான் குடும்பம் நடத்தினேன். அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை, ஏன் என்றால் நாங்களே கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வந்தோம். இதனால், இடத்தை விற்று அந்த பணத்தை பேங்கில் போட்டு அதில் வந்த வட்டி பணத்தில் குடும்பத்தை கவனித்துக்கொண்டேன் என்று அந்த பேட்டியில் டிஸ்கோ சாந்தி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X