விசித்ரா படுக்கையறைக்கு வந்த நடிகர்..அய்யோ அவர் ரொம்ப நல்லவர்.. பாலய்யாவை புகழ்ந்த டிஸ்கோ சாந்தி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை விசித்ரா தனக்கு சினிமாவில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.

அதில் நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த படத்தின் ஹீரோவுக்கு என் பெயர் கூட தெரியாது. இந்த படத்துல தான் நடிக்கிற நீ. ரூமுக்கு வா என்று மட்டும் கூறி அழைத்திருக்கிறார். அன்று இரவு ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அப்போது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார்கள். மாலை ஆனால் குடித்துவிட்டு அறையை வந்து தட்டுவார்கள். அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என வருத்தத்தில் இருந்தேன்.

Actress Disco Shanti said actor Balakrishna is a good person

அவரால் விசித்ராவுக்கு ஏற்பட்ட தொல்லைகளில் இருந்து அவரை காப்பாற்றியதே ஹோட்டல் மேலாளர் தான் என்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையாக மாற்றி விசித்ராவை காப்பாற்றினார். அந்த ஷாஜியை தான் பின்னர் விசித்ரா திருமணம் செய்துக் கொண்டார் என்றும் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டே விசித்ரா விலகி விட்டதாக கூறியிருந்தார்.

இணையத்தில் கசிந்த தகவல்: நடிகை விசித்ரா இப்படி சொன்னதும் நெட்டிசன்கள் அலறி ஆராய்ந்து அந்த ஹீரோ பாலகிருஷ்ணா என்று கண்டுபிடித்து பாலகிருஷ்ணாவை போட்டு பொளந்து வந்தனர். இப்போதும் இளம் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் பாலகிருஷ்ணா அதே போன்ற சில்மிஷங்களை தான் செய்து வருகிறார் என ஸ்ரீலீலா, ஹனி ரோஸ் உள்ளிட்ட நடிகைகளுடன் பாலகிருஷ்ணா மேடைகளில் நடந்து கொண்ட வீடியோக்களையும் ஷேர் செய்தனர்.

டிஸ்கோ சாந்தி பேட்டி: 80களில் கவர்ச்சி கடலாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழியின் ரசிகர்களை நனைய வைத்த டிஸ்கோ சாந்தி, நீண்ட இடைவெளிக்கு பின் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமான பேட்டி அளித்துள்ளார். அதில், செய்தியாளர் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா கூறிய புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், இந்த மாதிரி என்னிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால் செருப்பால் அடித்து இருப்பேன். நாம தைரியமாக இருந்தால் யாரும் நம்மிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் விசித்ரா நல்ல தைரியமான பொண்ணு தான், ஏன் பயந்தார் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

ரொம்ப நல்ல மனிதர்: நான் பாலகிருஷ்ணாவின் அப்பாக்கூட நடித்து இருக்கிறேன், தெலுங்கில் நான் போன புதிதில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். அப்போது எனக்கு அந்த டான்ஸ் மாஸ்டரைப்பார்த்து பயமாக இருந்ததால், நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அப்போது பாலகிருஷ்ணாதான் பயப்படாதே என்றார். அதே போல, ஓட்டலுக்கு செல்ல வண்டி இல்லாததால் படப்பிடிப்பு நடந்த அந்த ஐந்து நாளும் என்னையும் மேக்கப் மேனையும் ஓட்டலில் பத்திரமாக இறக்கிவிட்டார். அந்த அளவுக்கு பாலகிருஷ்ணா நல்ல மனிதர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X