கவர்ச்சி காட்டினா மட்டும் போதுமா? எல்லை மீறும் கங்குவா பட நடிகை.. விளாசும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. அந்த படத்தை ரசிகர்கள் கழுவி ஊற்றி வரும் போதும் அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் திஷா பதானி தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் இணையத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக திஷா பதானி, புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் பட வாய்ப்பு வராததால், பாலிவுட்டுக்கு சென்றார். பின் அவருக்கு தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான எம்.எஸ்.தோனி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதைத் தொடர்ந்து, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, பாரத், ஆதித்யா ராய் கபூருடன் மலங், பிரபுதேவா இயக்கிய ராதே ஆகிய படங்களில் நடித்தார்.

கங்குவா: பாலிவுட்டில் முன்னணி நடிகை என பெயர் எடுத்த திஷா பதானி, சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் தியேட்டரில் வெளியானது. படம் இரண்டாயிரம் கோடியை அள்ளும் என்று சொல்லப்பட்ட நிலையில், போட்ட பணத்தைக்கூட எடுக்க முடியாமல் போனது. ஓவர் பில்டப்புடன் வெளியான கங்குவா படத்தில் ஓவர் சத்தம், கதையே புரியவில்லை என இணைய வாசிகள் படத்தை கழுவி ஊற்றினார்கள். கங்குவா படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமே முதல் 20 நிமிட காட்சி தான் என்று சொல்லப்படுகிறது. இந்த காட்சியில் தான் திஷா பதானி நடித்து இருந்தார்.

நடித்து களைச்சிட்டீங்களா: இந்த 20 நிமி காட்சியை தூக்கி இருந்தாலே படம் நன்றாக இருந்து இருக்கும் என அனைவரும் கூறி வருகின்றனர். இப்படி கங்குவா படத்தைப்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் கவலையோடு நொந்து போய் இருக்கும் நிலையில், அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை திஷா பதானி எதைப்பற்றியும் கவலைப்படாமல், என்னமோ நடித்து களைத்துவிட்டது போல, மாலத்தீவில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டார்.

தற்போது இவர், இன்ஸ்டாகிராமில் பிகினியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்து கடுப்பான இணையவாசிகள், கவர்ச்சி காட்டினா மட்டும் போதுமா? என்னமோ நடிச்சு களைச்ச மாதிரி என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்



Click it and Unblock the Notifications











