பிரபல இளம் நடிகை மரணம்.. கடவுளுக்கு மட்டுமே தெரியும்.. இறப்பதற்கு முன் உருக்கமான போஸ்ட்!

By

மும்பை: பிரபல நடிகை திடீரென மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி சீரியல் நடிகை திவ்யா சாக்‌ஷி. இவர் ஹே அப்னா தில் தோ அவாரா உட்பட சில இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

எம்டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2011-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை

புற்றுநோய்க்கு சிகிச்சை

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதை திவ்யாவின் உறவினர் சவும்யா அமிஷ் வர்மா தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இதை சொல்வது மிகுந்த வேதனையை தருகிறது. எனது உறவினர் திவ்யா சாக்‌ஷி, இந்த இளம் வயதில் கேன்சரால் மரணமடைந்துவிட்டார்.

வேகமாகப் பரவியது

வேகமாகப் பரவியது

அவர் லண்டனில் நடிப்பு பயிற்சிப் பெற்றவர். சில படங்களில் நடித்திருக்கிறார். பாடகியாகவும் அவர் வளர்ந்து வந்தார்' என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்தத் தகவல் இந்தி சினிமாவிலும் சின்னத்திரை வட்டாரத்திலும் வேகமாகப் பரவியது. இது அவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திவ்யாவுடன் நடித்தவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மரணப்படுக்கை

மரணப்படுக்கை

இந்நிலையில் தான் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உருக்கமானப் பதிவு ஒன்றை நடிகை திவ்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த போதுமான வார்த்தைகள் இல்லை. சில மாதங்களாகத் தப்பி ஓடி, இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்!

வலி இல்லாத வாழ்க்கை

வலி இல்லாத வாழ்க்கை

இருந்தாலும் வலுவாக இருக்கிறேன். வலி இல்லாத மற்றொரு வாழ்க்கை கிடைக்கட்டும். தயவு செய்து கேள்விகள் வேண்டாம். என்னை நீங்கள் எவ்வளவு அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இவ்வாறு கூறியுள்ளார். திவ்யாவின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. பலர் அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளனர்.

வேறு கணக்கு

வேறு கணக்கு

'உங்கள் கனவு, ஆசை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றை வேறு யாரிடமும் பார்க்க முடியாது. உங்களை நிச்சயம் மிஸ் பண்ணுவேன், திவ்யா. ஒருவேளை கடவுள் வேறு கணக்கு வைத்திருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார், அவருடன் ஹே அப்னா தில் தோ அவாரா நடித்த ஷாகில் ஆனந்த். இவரை போலவே மேலும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் தொடர்ந்து மரணங்கள் நடந்து வருகின்றன.

நடிகர் இர்பான்கான்

நடிகர் இர்பான்கான்

ஏப்ரல் மாத இறுதியில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் இர்பான்கான் மரணமடைந்தார். அவரை அடுத்து ரிஷி கபூர் திடீரென மறைந்தார். மேலும் சில மூத்த நடிகர்கள் உயிரிழந்தனர். இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பானது. ஐஸ்வர்யா ராயுடன் நடித்த ரஞ்சன் சேகல் என்பவர் நேற்று மரணமடைந்தார், இப்போது இவர் மரணமடைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X