Divya bharathi: திவ்யபாரதி பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டிவிட்ட ஜிவி பிரகாஷ்!

சென்னை: இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய ஜிவி பிரகாஷ் 100 படங்களை தாண்டியுள்ளார். டார்லிங் படம் மூலம் நடிகராகவும் மாறிய ஜிவி பிரகாஷ், தற்போது 25வது படத்தில் நடித்து வருகிறார். கிங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார். முன்னதாக பேச்சுலர் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஜிவி பிரகாஷ் -திவ்யபாரதி கூட்டணி இணைந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படம் அறிவிக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நிலையில், ரசிகர்களை இந்த லுக் வெகுவாக கவர்ந்தது. முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங்கின் துவக்கவிழாவில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்து வருகிறார். கடல் பின்னணியில் திகில் சாகச கதைக்களத்தில் இந்தப் படம் தயாராகி வருகிறது. படத்தை ஜீ ஸ்டூடியோசுடன் இணைந்து தன்னுடைய பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜிவி பிரகாஷ் தயாரித்து வருகிறார்.

Actress Divya bharathi celebrates her birthday with Kingston team

நடிகர் ஜிவி பிரகாஷ்: கோலிவுட்டில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கிய ஜிவி பிரகாஷ் தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் கமிட்டாகி இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளராக 100 படங்களை வெற்றிகரமாக தாண்டி இசை அசுரன் என்று பெயரெடுத்துள்ள ஜிவி பிரகாஷ் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என அடுத்தடுத்த களங்களில் பயணித்து வருகிறார். நடிகராக தற்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். கிங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார். முன்னதாக பேச்சுலர் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இவர்கள் இணைந்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜிவி பிரகாஷ் இந்தப் படத்தை தன்னுடைய பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். கடல் பின்னணியில் சாகச கதைக்களத்தில் தயாராகிவரும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிவருகிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் என்று ஜீ ஸ்டூடியோசின் தென்னிந்திய திரைப்பட பிரிவு தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே இந்தப் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என்று ஜிவி பிரகாஷும் கூறியிருந்தார்.

Actress Divya bharathi celebrates her birthday with Kingston team

திவ்யபாரதி பிறந்தநாள் கொண்டாட்டம்: மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் திவ்யபாரதியின் பிறந்தநாளையொட்டி கிங்ஸ்டன் படக்குழுவினர் கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜிவி பிரகாஷ், திவ்ய பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்ததோடு, அவருக்கு கேக் ஊட்டி விட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. பிறந்தநாளாக இருந்தாலும் எளிமையாக உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் திவ்யபாரதி.

அதீத கவர்ச்சி: சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் திவ்யபாரதி, அதீதமான கவர்ச்சியில் அடுத்தடுத்த போட்டோஷுட்களை வெளியிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். பேச்சுலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ஒருவலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில படங்களில் மட்டுமே கமிட்டாகி நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். தற்போது பிறந்தநாளை கொண்டாடியுள்ள திவ்யபாரதிக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X