Divya Bharathi: அரபிக் குத்துக்கு இறங்கி குத்திய கிளாமர் குயின் திவ்ய பாரதி.. வீடியோவை பார்க்கனுமே!
சென்னை: பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை திவ்ய பாரதி. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக திவ்ய பாரதி ஏற்று நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் சில கிளாமர் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலரது ரசிகர்கள் மத்தியில் ரணத்தை உருவாக்கியது என்பது உண்மை எனக் கூறலாம். படத்தில் மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் எனக் கூறலாம். இந்நிலையில் இவர் அரபிக்குத்து பாடலுக்கு நடினம் ஆடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
நடிகை திவ்யபாரதி பேச்சுலர் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்திலேயே ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்து அதிரடியாக ரசிகர்களை கவர்ந்தவர். கோவைப் பெண்ணான இவர், முதல் படத்திலேயே ஓவர் கவர்ச்சிமூலம் ரசிகர்களை திண்டாட செய்தார். இந்தப் படம் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் திவ்யபாரதி. இதன்மூலமும் பட வாய்ப்புகளையும் தேடி வருகின்றார்.

குறுகிய காலத்திலும் சரி, தமிழில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகளிலும் சரி, இவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்துள்ளார் என்றால் அது பலருக்கும் ஆச்சரியம்தான். மாடலிங் துறையில் இருந்த திவ்ய பாரதி, அதன் பின்னர் சினிமா உலகில் கால் பதித்தார். தனது முதல் படத்திலேயே அதிரடியான கிளாமர் காட்சிகளில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். படத்தில்தான் கிளாமர் காட்சிகளில் நடித்துள்ளார், அது கதையின் தேவை என பலர் நினைத்தனர். ஆனால் திவ்ய பாரதியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் நடத்தும் கிளாமர் ஃபோட்டோ சூட்களைப் பகிர்ந்து தனது ரசிகர்களை எப்போதும் தன்னைச் சுற்றியே வைத்துள்ளார்.

அதிக ரசிகர்கள்: 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பல நடிகைகளைக் கூட இன்ஸ்டாகிராமில் இவ்வளவு ரசிகர்கள் பின் தொடருவதில்லை எனக் கூறும் அளவிற்கு, திவ்ய பாரதியை ரசிகர்கள் பின் தொடருகின்றனர். திவ்யபாரதியை இன்ஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 36 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகின்றனர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் திவ்ய பாரதி நடித்து வருகின்றார்.

GOAT படம்: இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகாராஜா. இந்தப் படத்தில் மிகவும் சிறிய கதாபாத்திரம் என்றாலும், அதில் கச்சிதமாகப் பொருந்திப் போனார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்றால் அது, மதில்மேல் பூனை, ஆசை, கிங்ஸ்டன் ஆகிய படங்கள் வரிசையாக உள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில் இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள GOAT படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரபிக்குத்து: சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்டிவாக காணப்படும் திவ்யபாரதி, இதன்மூலமும் பட வாய்ப்புகளை ஈர்த்து வருகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அடுத்தடுத்து அதீத கவர்ச்சியில் இவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











