12 Result: நடிகை திவ்யா துரைசாமியின் தம்பி.. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. இதில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளைத் தெரிந்து கொண்டனர். இந்த தேர்வில் நடிகை திவ்யா துரைசாமி என் தம்பி 600 க்கு 509 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

12வது ரிசல்ட்: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2ந் தேதி முதல் 26ந் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதன்படி பள்ளிக்கல்வித் துறை இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் பேட்டி அளித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

12th exam Actress Divya Duraisamy 12
Photo Credit:

சூப்பர் மார்க்: இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படத்தில் நடிகை திவ்யா துரைசாமியின் தம்பியாக 'சிவனணைந்தான்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 509 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் 96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 75, வேதியலில் 77, வணிகவியல் 71, கணக்கியல் 93, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 84 என 600க்கு 509 மதிப்பெண், என நல்ல மதிப்பெண்ணை எடுத்துள்ளார். இந்த தகவலை நடிகை திவ்யா துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து என் தம்பி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

12th exam Actress Divya Duraisamy 12
Photo Credit:

குவியும் வாழ்த்து: வாழை திரைப்படத்தில் 'சிவனணைந்தான்' ரோலில் நடித்த பொன்வேல் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு அவரின் நடிப்பு இருந்தது. அதே போல 'வாழை' படத்தில் திவ்யா துரைசாமி வேம்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X