ரசிகரை கொலை செய்த தர்ஷன்.. இதுக்கா கொலை பண்ணீங்க.. விளாசிய நடிகை!

சென்னை: பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை கொடூரமாக கொலை செய்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கர்நாடகாவில் புயலைக் கிளப்பியிருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்து வரும் நிலையில், தர்ஷனை பிரபல நடிகை திவ்யா கடுமையாக கண்டித்துள்ளார்.

கன்னட திரைப்பட நடிகர் தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் மகனும் இருக்கும் நிலையில், அவரைவிட்டு பிரிந்து பவித்ரா கவுடா ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். பவித்ரா கவுடா பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகசாமி என்கிற இளைஞர் மோசமாக கமெண்ட் செய்து வந்துள்ளார். மேலும், பவித்ரா கவுடாவிற்கு ஆபாசமான போட்டோக்களை அனுப்பி உள்ளார்.

Darshan

ரேணுகாசாமி கொலை: இந்த நேரத்தில், ரேணுகா சுவாமி காமாக்‌ஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து, போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் நான்கு பேர் தானாக ஆஜராகி பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறினர். இந்த விவகாரத்தில், ரேணுகாசாமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன் பேரில் நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இதற்காக கொலை: கன்னட திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் இந்த கொடூர கொலை குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை திவ்யா, தர்ஷனை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் பிளாக் என்கிற ஆப்சன் இருக்கு அதை செய்து இருக்கலாம். அவர்கள் ட்ரோல் செய்வது பிடிக்கவில்லை என்றால் புகார் கொடுக்கலாம். நடிகர்கள், நடிகைகள், அவர்களின் மனைவி, குகுழந்தைகள் என்று அனைவரையும்தான் ட்ரோல் செய்கிறார்கள். என்ன ஒரு கொடுமையான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று தெரியவில்லை. நான்கூட இதற்காக புகார் கொடுத்து இருக்கிறேன். சில நேரம் இரக்கப்பட்டு புகாரை வாபஸ் வாங்கி இருக்கிறேன்.

Darshan

சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது: யாருமே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, யாருமே சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. இப்படி அடிப்பது, கொலை செய்வது போன்ற செயலில் யாருமே ஈடுபடக்கூடாது. நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தாலும், இல்லை என்றாலும், புகார் கொடுப்பது தான் சரி. இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறையை நான் பாராட்டுகிறேன். அவர்கள் அவர்களின் வேலையை சரியாக செய்து வருகிறார்கள். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அவர்கள் அடிபணிய மாட்டார்கள் என்பதை நான் நம்புகிறேன். மேலும் மக்களுக்கு நீதித்துறையின் மீது இருக்கும் நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என்று, நடிகர் தர்ஷனுக்கு எதிராக நடிகை திவ்யா கருத்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X