Divya Spandana: தயாரிப்பாளராக மாறிய தனுஷ் பட நாயகி.. என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?
சென்னை: நடிகை திவ்யா ஸ்பந்தனா குத்து என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னதாக ரம்யா என்ற பெயரை அவர் திவ்யா ஸ்பந்தனா என மாற்றிக் கொண்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் அதிகமான படங்களில் நடித்துள்ள திவ்யா, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் திவ்யா.

நடிகை திவ்யா ஸ்பந்தனா தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவரது தயாரிப்பில் தற்போது Swathi Muthina Male Haniye என்ற படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
நடிகை திவ்யா ஸ்பந்தனா: நடிகை திவ்யா ஸ்பந்தனா தமிழில் குத்து படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து சிம்பு, தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்த திவ்யா அரசியலிலும் சிறப்பாக பங்களித்து வருகிறார். முன்னதாக ரம்யா என்ற பெயருடன் தமிழில் நடித்துவந்த இவர், திவ்யா ஸ்பந்தனா என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி: கன்னடத்தில் தினேஷ் பாபு இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டில் வெளியான அபி என்ற படத்தின்மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அமிர்ததாரே, தனனம் தனனம் ஆகிய படங்களில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுகளை பெற்ற திவ்யா தொடர்ந்து கன்னடத்தில் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தமிழில் குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களின் மூலம் இவர் கவனம் பெற்றவர்.
தயாரிப்பாளரான திவ்யா ஸ்பந்தனா: இந்நிலையில் தற்போது கன்னடத்தில் சுவாதி முத்தின மலே ஹனியே என்ற படத்தை தன்னுடைய ஆப்பிள் பாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்திற்காக தயாரித்துள்ளார் திவ்யா. இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராஜ் பி ஷெட்டி மற்றும் சிரி ரவிக்குமார் நடித்துள்ள இந்தப் படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் நிறைவு செய்யப்பட்டிருந்தது. உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை ராஜ் பி ஷெட்டியே இயக்கியுள்ளார்.
எளிமையான திரைக்கதை: சண்டைக்காட்சிகள், அதிரடி டயலாக்குகள் இல்லாமல் எளிமையான திரைக்கதையுடன் இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தன்னுடைய முதல் தயாரிப்பாள ஸ்வாதி முத்தின மலே ஹனியே படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்குமாறும் இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் திவ்யா ஸ்பந்தனா தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். அழகான படத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மீண்டும் நடிப்பில் ஆர்வம்: கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்தாலும் பல்வேறு பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. அரசியல் ஈடுபடும்வகையில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட திவ்யா, மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











