ஆஹா வம்பை விலை கொடுத்து வாங்குகிறாரே திவ்யா!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்போடு ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் திவ்யா ஸ்பந்தனா.
டெல்லி: நடிகை திவ்யா ஸ்பந்தனா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்போடு ஒப்பிட்டுள்ளார்.
குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. அப்படத்திற்க்கு பிறகு குத்து ரம்யா என பரவலாக அழைக்கப்பட்டதால் அவரது ஒரிஜினல் பெயரான திவ்யா ஸ்பந்தனா என்பதே பலருக்கு மறந்து போய் விட்டது. தமிழ் சினிமாவை விட்டு ஓய்ந்த பிறகு திவ்யாவுக்கு மாறிக் கொண்டார்.

தமிழில் பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்த அவர், பிறகு சினிமாவை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்வைத் துவங்கினார். இப்போது காங்கிரஸ் கட்சியின், தேசிய சமூக வலைதளம் மற்றும் தகவல் தொடர்புத் துறை தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் இவர் போட்டுள்ள ஒரு இன்போகிராப் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்புடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். முஸ்லீம் பிரதர்ஹுட் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டதாகும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் மையத்தில் உரையாற்றிய போது இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளை எல்லாம் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்ற நினைக்கிறது, எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்புக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் ஒற்றுமை உள்ளது எனப் பேசியிருந்தார். இதற்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக கூறியது.
ராகுலுக்கு ஆதரவளிக்கும் வகையில், திவ்யா ஸ்பந்தனா இரு அமைப்புகளுக்கும் இருக்கும் ஒற்றுமையை பட்டியலிட்டுள்ளார்.
இரண்டு இயக்கங்களும் தொடங்கப்பட்ட ஆண்டு, நோக்கம், செயல்பாடு என பட்டியலிட்டுள்ளார். இதை வைத்து என்னவெல்லாம் பஞ்சாயத்துக் கிளம்பப் போகுதோ!


Click it and Unblock the Notifications











