பிக்பாஸ் வைல்டு கார்டு என்ட்ரியா? திவ்யா ஸ்ரீதர் சொன்ன டாப் சீக்ரெட்.. தீபாவளிக்கு சரவெடி இருக்குமா?
சென்னை: சின்னத்திரை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர், கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கிட்டத்தட்ட 5 வருடங்களாக ஒன்றாகவே ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தபோது 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் செய்து கொண்ட போட்டோவை பகிர்ந்து திருமணமானதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து, சில நாட்கள் கழித்து கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதன் பின், தனது கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மீடியா முன் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

நடிகை திவ்யா,அர்னவ்: மேலும், அர்னவ் செல்லம்மா சீரியல் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருவதாகவும், அந்த நடிகையின் பேச்சை கேட்டுக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், திருமணமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் எப்போது பகிர்ந்தேனோ அன்று முதல், அவர் என்னை மிரட்டி வருகிறார். நான் அவருக்காக இஸ்லாமிய மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டேன் ஆனால், அவர் என்னை உதாசீனப்படுத்துகிறார் என்று கண்ணீர் மல்க கூறினார். இதுகுறித்து, திவ்யா அளித்த புகாரின் பேரில் அர்னவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார்.
பிக் பாஸ் வீட்டில் அர்னவ்: இந்நிலையில், திவ்யா, அர்னவ் பஞ்சாயத்து ஓய்ந்து இருந்த நிலையில், அர்னவ் பிக் பாஸ் வீட்டுக்குள் அன்ஷிதாவுடன் சென்றதால் மீண்டும் இவர்களின் பெயர் சோஷியல் மீடியாவில் அடிபட்டு வருகிறது. அர்னவ், திவ்யாவிற்கு போட்டியாக திவ்யா வைல்டு கார்டில் என்ட்ரியாவார் என்ற செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து, இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசி திவ்யா, நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவேன் என்ற செய்தி பரவி வருகிறது. அது உண்மை இல்லை.பாப்பா வீட்டில் இருக்கிறாள் அவளை விட்டுவிட்டு என்னால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக முடியாது. அதுவும் இல்லாமல் செவ்வந்தி சீரியல் போய்க்கொண்டு இருக்கிறது.
சன் டிவி செய்த உதவி: அர்னவ் கூட எனக்கு பிரச்சனை வந்த போது, சன் டிவி நினைத்து இருந்தால், அந்த சீரியலில் இருந்து என்னை நீக்கி இருக்க முடியும். ஆனால்,அவங்க எனக்காக டைம் கொடுத்தாங்க. அதுமட்டுமில்லாமல், என் அம்மாவிற்கு கேன்சர், அதற்கு மருத்துவ செலவு செய்ய என்னால முடியல, அந்த நேரத்திலும், சன் பவுன்டேஷன் மூலமா பல உதவிகளை செய்தார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது தான், கடவுள் என் கூட இருக்கிறார் என்பதை உணருகிறேன் என்று திவ்யா இந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











