நள்ளிரவில் கதவைத் தட்டி அச்சுறுத்திய கணவன் அர்னவ்.. பஞ்சாயத்து செய்து வைத்த போலீசார்!
சென்னை : கேளடி கண்மணி, மகராசி உள்ளிட்ட சீரியல்கள்மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் திவ்யா ஸ்ரீதர்.
செல்லம்மா சீரியலில் நடித்துவரும் தன்னுடைய கணவன் அர்னவ் தன்னை அச்சுறுத்துவதாக இவர் புகார் அளித்துள்ளார்.
தன்னுடைய கணவன் அடித்து துன்புறுத்தியதால், தன்னுடைய கரு கலையவிருந்ததாக திவ்யா ஸ்ரீதர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அர்னவ் -திவ்யா ஸ்ரீதர் திருமணம்
கேளடி கண்மணி தொடர்மூலம் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இடையில் பழக்கமாகி இருவரும் லிவிங் டுகெதராக இருந்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு இருந்தநிலையில், கடந்த ஜூன் மாதத்தில் திருமணமும் செய்துள்ளனர். ஆனால் திருமணமான விஷயத்தை வெளியில் கூறாமல் மறைத்துள்ளார் அர்னவ்.

திருமணத்தை மறைக்க வற்புறுத்திய அர்னவ்
தொடர்ந்து திவ்யா ஸ்ரீதரும் தங்களின் திருமணத்தை வெளியில் தெரிவிக்காமல் இருக்கவும் அர்னவ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே செல்லம்மா சீரியலில் நடித்துவரும் அர்னவ், அந்த தொடரின் மற்றொரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதால் தன்னை கழற்றிவிட முயற்சிப்பதாக திவ்யா ஸ்ரீதர் புகார் தெரிவித்திருந்தார்.

அடித்து துன்புறுத்திய அர்னவ்
தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் கர்ப்பமாக இருக்கும் தனக்கு பிளீடிங் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தன்னுடைய வயிற்றில் உதைத்ததால் கரு கலைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

திவ்யா நாடகம் என குற்றச்சாட்டு
இதனிடையே கருவை கலைக்கவே திவ்யா நாடகமாடுவதாக அர்னவ் பதில் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்த நிலையில், தற்போது இருவரும் ஒரே வீட்டில்தான் இருக்கின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் தன்னுடைய அறைக்கதவை அர்னவ் உடைக்க முயற்சிப்பதாகவும் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் திவ்யா போலீசில் புகார் அளித்திருந்தார்.

நள்ளிரவில் அராஜகம்
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அர்னவிடம் விசாரணை மேற்கொண்டபோது, தன்னுடைய ஜிம் உபகரணங்களை எடுக்கவே தான் திவ்யாவின் அறைக்கதவை தட்டியதாக அவர் பதிலுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து திவ்யா அறையில் இருந்த அர்னவின் பொருட்களை போலீசார் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.

தம்பதியின் மனக்கசப்பு
தம்பதிக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரையொருவர் இப்படி மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொள்வதும் அதற்காக எடுத்த எடுப்பிற்கெல்லாம் காவல்துறையினரை அழைப்பதும் என்று இவர்களின் நடவடிக்கையால் நடு இரவில் மண்டை குழம்பிப் போய் போலீசார் திரும்பி சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











