Divya Sridhar: பாடம் சொல்லிக் கொடுத்த திவ்யா ஸ்ரீதர்.. கொட்டாவி விட்ட குழந்தை.. க்யூட் வீடியோ!

சென்னை : சின்னத்திரை சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், மனக்கசப்பு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சீரியலில் இணைந்து நடித்தபோது இவர்கள் இருவரும் காதலித்து, தங்களது மத முறைப்படி திருமணமும் செய்துக் கொண்டனர்.

தற்போது தன்னுடைய குழந்தையுடன் திவ்யா தனித்து வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து குழந்தையின் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Actress Divya Sridhar shared her daughters cute video in Instagram

திவ்யா ஸ்ரீதர் வெளியிட்ட மகளின் க்யூட் வீடியோ: சின்னத்திரையில் செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார் திவ்யா ஸ்ரீதர். இவரும் சின்னத்திரை நடிகர் அர்னவும் சீரியலில் இணைந்து நடித்தபோது காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். தங்களது மத முறைப்படி திருமணமும் செய்துக் கொண்டனர். இருவரும் இணைந்து வாழ்ந்துவந்த நிலையில், கர்ப்பிணியான தன்னை, அர்னவ் அடித்து துன்புறுத்துவதாக திவ்யா ஸ்ரீதர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் அர்னவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது நிபந்தனை ஜாமீனில் அர்னவ் வெளியில் வந்துள்ளார். தற்போது செல்லம்மா என்ற தொடரில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் ஒருவர்மீது ஒருவர் மாற்றி மாற்றி புகார் தெரிவித்து வருகின்றனர். அர்னவ், அதிகமான பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளதாக திவ்யா, பேட்டியொன்றில் குற்றம் சாட்டினார்.

Actress Divya Sridhar shared her daughters cute video in Instagram

இதையடுத்து, திவ்யா ஸ்ரீதர் வேறொருவருடன் தொடர்பில் உள்ளதாக அர்னவ் புகார் தெரிவித்திருந்தார். இவர்கள் இருவரும் இப்படி மாற்றி குற்றம் சாட்டி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த திவ்யா ஸ்ரீதர், தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். அவர் தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தையுடன் தான் அதிகமான நேரத்தை செலவழிக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய குழந்தைதான் தன்னுடைய உலகம் என்று அவர் குறிப்பிட்டு வருகிறார். தொடர்ந்து குழந்தையுடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அவர் வரும் வீடியோவும் வெளியானது. முன்னதாக தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்ள யாருமில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது குழந்தையை மட்டும் காட்டியுள்ளார். அவரது வாய்ஸ் மட்டும் அந்த வீடியோவில் வெளிப்பட்டுள்ளது.

Actress Divya Sridhar shared her daughters cute video in Instagram

இந்த வீடியோவில் தன்னுடைய குழந்தைக்கு குட் மார்னிங் சொல்லி துவங்குகிறார் திவ்யா. தொடர்ந்து குழந்தைக்கு அம்மா என சொல்லிக் கொடுக்கிறார். இவை அனைத்திற்கும் குழந்தை நன்றாக ரியாக்ட் செய்கிறது. ஒரு கட்டத்தில் டயர்டாகி கொட்டாவி விடுகிறது. இந்த வீடியோவின் இறுதியில் ஐ லவ் யூ என்று சொல்லி முடிக்கிறார் திவ்யா. மேலும் தன்னுடைய வாழ்க்கையில் பக்கங்கள் நிறைவு பெற்றதாக நினைத்த நிலையில், மிகவும் அழகான பாகமாக தன்னுடைய குழந்தை அமைந்ததாகவும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X