அமெரிக்காவில் வளைகாப்பு... புகைப்படங்களை வெளியிட்ட முன்னாள் ஹீரோயின்!
ஹூஸ்டன்: பிரபல நடிகை திவ்யா உன்னிக்கு வளைகாப்பு விழா சமீபத்தில் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகை திவ்யா உன்னி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர், தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடன கலைஞரும் கூட. பரதநாட்டியம், குச்சிப்புடி, மோனியாட்டம் உட்பட பல்வேறு நடனங்களை கற்றுள்ளார். நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் திவ்யா உன்னி கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் வளைகாப்பு விழா நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











