For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்காவில் வளைகாப்பு... புகைப்படங்களை வெளியிட்ட முன்னாள் ஹீரோயின்!

    By
    |

    ஹூஸ்டன்: பிரபல நடிகை திவ்யா உன்னிக்கு வளைகாப்பு விழா சமீபத்தில் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    பிரபல மலையாள நடிகை திவ்யா உன்னி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர், தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடன கலைஞரும் கூட. பரதநாட்டியம், குச்சிப்புடி, மோனியாட்டம் உட்பட பல்வேறு நடனங்களை கற்றுள்ளார். நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    Actress Divya Unni and Arun expecting their first child

    சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

    Actress Divya Unni and Arun expecting their first child

    பின்னர் அருண் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அங்கு ஹூஸ்டன் நகரில் ஶ்ரீபடம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களை அவர் கற்றுத்தருகிறார்.

    அடுத்தபடியாக.. இந்திக்குப் போகும் ராட்சசன்.. நாயகன் குரானா

    இந்நிலையில் திவ்யா உன்னி கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் வளைகாப்பு விழா நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actress Divya Unni and Arun expecting their first child
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more