எங்களின் புதிய இளவரசிக்கு உங்கள் ஆசி தேவை.. பிரபல நடிகைக்கு அமெரிக்காவில் பிறந்தது பெண் குழந்தை

By

ஹூஸ்டன்: அமெரிக்கவில் வசிக்கும் முன்னாள் ஹீரோயின், தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா உன்னி. தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடன கலைஞரும் கூட. பரதநாட்டியம், குச்சிப்புடி, மோனியாட்டம் உட்பட பல்வேறு நடனங்களை கற்றுள்ளார். நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர் அருண் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்

ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்

அங்கு ஹூஸ்டன் நகரில் ஶ்ரீபடம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களை அவர் கற்றுத்தருகிறார். இந்நிலையில் திவ்யா உன்னி கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் வளைகாப்பு விழா நடந்தது.

கர்ப்பத்துடன்

கர்ப்பத்துடன்

இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அவருக்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கர்ப்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.

புதிய இளவரசி

இந்நிலையில் தனக்கு அமெரிக்கவில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூகவலைத்தளத்தில், எங்களுக்கு புதிய இளவரசி பிறந்துள்ளார். அவருக்கு ஐஸ்வர்யா என்று பெயர் வைத்துள்ளோம். இந்த இளவரசிக்கு உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X