பா ரஞ்சித் படத்துல எனக்கு இப்படிதான் வாய்ப்பு கிடைச்சுது.. மனம் திறந்த தர்ஷா விஜயன்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து நடிகை தர்ஷா விஜயன் மனம் திறந்து பேசியுள்ளார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா லீடிங் ரோலில் நடித்துள்ளார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக தர்ஷா விஜயன் நடித்துள்ளார். அடுத்தப்படியாக வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் தர்ஷா விஜயன்.

ஃபேஷன் டிசைனிங்
தர்ஷா விஜயன் திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரத்தில் பிறந்தவர். ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ள தர்ஷா விஜயன், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அததில் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த படம்தான் காரணம்
அதன்படி, தர்ஷா விஜயன் போதை ஏறி புத்தி மாறி என்ற படதிதன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானதாக கூறியுள்ளார். அந்த வாய்ப்புதான் தான் சினிமாவை கற்றுக்கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பு என்றும் கூறினார். அந்த படத்தில் நடித்ததன் மூலம்தான் மக்களுக்கு எனக்கு நடிக்க தெரியும் என்றும் அதனால்தான், அன்புள்ள கில்லி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார்.

6 ஆண்டுகள் காத்திருந்தேன்
மேலும் தன்னுடைய குறும்படமான கண்ணம்மா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதன்மூலம் தான் என்றார். சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க 6 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே வேறு எந்த வேலையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழில் பேசி
சார்பட்டா பரம்பரை படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் பா. ரஞ்சித்தின் அலுவலகத்தில் இருந்து தனக்கு போன் வந்ததாகவும், பின்னர் பா ரஞ்சித்தே தன்னிடம் பேசி தனது வேலைப்பற்றி கேட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரிடம் முழுக்க தமிழில் பேசி இம்ப்ரஸ் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

நல்லா கத்தினேன்
மேலும் தன்னை ஆடிஷனுக்கு அழைத்து தன்னை அடி தொண்டையில் இருந்து கத்த சொன்னதாகவும் கூறியுள்ளார். இப்படி கத்திதான் சார்பட்டா பரம்பரை படத்தில் தான் வாய்ப்பு பெற்றதாகவும் கூறியுள்ளார் தர்ஷா விஜயன்.


Click it and Unblock the Notifications











