Dushara Vijayan: சரியா வர்றவரைக்கும் விடமாட்டாங்களாம்.. அடம்பிடிக்கும் துஷாரா விஜயன்!
சென்னை: நடிகை துஷாரா விஜயன் தமிழில் கவனத்திற்குரிய நடிகையாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து மிகப்பெரிய கவனத்தை பெற்ற துஷாரா விஜயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ராயன் படம் வெளியாகி உள்ளது.
தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான வசூலையும் பெற்று வருகிறது. துஷாரா விஜயன் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அடுத்ததாக விக்ரமுடன் வீர தீர சூரன் மற்றும் ரஜினியுடன் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துவரும் துஷாரா விஜயன் தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நடிகை துஷாரா விஜயன்: நடிகை துஷாரா விஜயன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் சார்பட்டா பரம்பரை படத்தில் துவங்கியது துஷாரா விஜயனின் திரைப்பயணம். அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் துஷாரா. படம் வெளியாகி சிறப்பான கலெக்ஷனை பெற்றுவரும் நிலையில் துஷாராவின் நடிப்பும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக விக்ரமுடன் வீர தீர சூரன் படத்தில் அருண்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
வேட்டையன் படம்: ரஜினி -டிஜே ஞானவேல் காம்பினேஷனில் உருவாகியுள்ள வேட்டையன் படத்திலும் நடித்துள்ளார் துஷாரா விஜயன். படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் வேலைகளில துஷாரா ஈடுபட்டு வருகிறார். டப்பிங்கின்போது காட்சிகளுக்கான டயலாக்குகளை எழுதி வைத்து அவர் மிகப்பெரிய மெனக்கடலுடன் டப்பிங் பேசி வருவது குறித்து தற்போது தயாரிப்புத்தரப்பு புகைப்படங்களுடன் பாராட்டு தெரிவித்துள்ளது. டப்பிங்கின்போதும் அதன்பின்பும் தன்னுடைய டயலாக்கை எழுதி பிராக்டீஸ் செய்தபின்பே துஷாரா டப்பிங் பேசி வருகிறார்.

டப்பிங்கில் துஷாரா விஜயன்: இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. முன்னதாக ராயன் படத்தின் ப்ரோமோஷன்களில் மிகப்பெரிய அளவில் கலந்து கொண்டார் துஷாரா விஜயன். படக்குழுவினருடன் இணைந்து ஏராளமான பேட்டிகளை கொடுத்திருந்த துஷாரா விஜயன், தொடர்ந்து படம் வெளியான திரையரங்குகளிலும் நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியான கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து வரும் துஷாரா, முன்னதாக கொடுத்துள்ள பேட்டியொன்றில், 35 வயது வரை மட்டுமே தான் நடிப்பேன் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
துஷாராவின் திட்டம்: 35 வயதிற்கு பிறகு படங்களில் அதிகமான நடிப்பதை விட்டுவிட்டு தனக்கு விருப்பமான வகையில் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்றும் துஷாரா குறிப்பிட்டிருந்தார். சார்ப்பட்டா பரம்பரையை படத்தை தொடர்ந்து தற்போது ராயன் படம் மிகப்பெரிய பாராட்டுக்களை அவருக்கு பெற்றுத் தந்துள்ள நிலையில் சூப்பர்ஸ்டாருடன் நடித்துள்ள வேட்டையன் படமும் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











